லாட்டரி கடைகள் மீண்டும் மூடல்
சென்னை:
லாட்டரிச் சீட்டுக்களை விற்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த ஒரு வார காலக் கெடு முடிவடைந்ததையடுத்துதமிழகம் முழுவதும் இன்று முதல் மீண்டும் லாட்டரிக் கடைகள் மூடப்பட்டன. இது தொடர்பான வழக்கில் நாளைதீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
லாட்டரி விற்பனைக்கு தமிழக அரசு திடீர் தடை விதித்தது. இதையடுத்து கடந்த 9ம் தேதி முதல் லாட்டரிக் கடைகள்மூடப்பட்டன. இதை எதிர்த்து லாட்டரி ஏஜெண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதையடுத்து அச்சிடப்பட்ட லாட்டரிகளை விற்க மட்டும் ஒரு வாரததுக்குக் கடைகளைத் திறக்கலாம் எனவும்அதன் பின் மூடிவிட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த ஒரு வார காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று முதல் தமிழகம் முழுவதும் லாட்டரிக்கடைகள் மூடப்பட்டன.
நாளை தீர்ப்பு:
இந்நிலையில் லாட்டரிக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் மீதான தீர்ப்பு நாளைவழங்கப்படுகிறது.
லாட்டரித் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தலைமைநீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி மலை சுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதை விசாரித்தது.
தங்கள் லாட்டரிச் சீட்டுக்களை விற்பதற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளிக்க வேண்டும் என்று மிசோரம்லாட்டரி சார்பில் சமீபத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுவும் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
விற்பனையாளர்கள் உண்ணாவிரதம்:
இதற்கிடையே லாட்டரிச் சீட்டுக்களுக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கக் கோரி அகில இந்திய லாட்டரிச் சீட்டுவிற்பனையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை எதிரே இந்த உண்ணாவிரதம் நடக்கவுள்ளது. லாட்டரிக்குவிதிக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த தடையை நீக்கக் கோரி இந்தப் போராட்டம் நடக்கிறது.
போராட்டம் குறித்து சம்மேளனத்தின் தலைவர் உஸ்மான் பயஸ் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்,
தடையை நீக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். லாட்டரிக்கு விதித்ததடையை ஜெயலலிதா தயவு செய்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
இந்தியாவில் லாட்டரி மூலம் ரூ.50,000 கோடி அளவுக்கு பிசினஸ் நடக்கிறது. இதில் 45 தல் 50 சதவீத வருவாய்தமிழகத்திற்குத்தான் கிடைக்கிறது. எனவே இந்தத் தடை தமிழக பொருளாதாரத்திற்கு மிகப் பெரிய பாதிப்பைஏற்படுத்தும்.
கடந்த 1974 மற்றும் 1997 ஆகிய ஆண்டுகளில் லாட்டரிக்குத் தடை விதிக்கப்பட்டபோது, மூன்று மாத காலம் வரைஅவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது திடீரென்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியிலிருந்துஇன்னும் நாங்கள் மீளவில்லை என்றார் உஸ்மான்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications