நெடுமாறனுக்கு ஜாமீன் கிடைக்குமா?: உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை
சென்னை:
பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்ட 5பேர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுக்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகின்றன.
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாகக் கூறி கடந்த ஆகஸ்டு 1ம் தேதி நெடுமாறனை தமிழக போலீசார்கைது செய்தனர்.
மேலும் தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளரான சுப. வீரபாண்டியன், நிர்வாகிகளான பாவாணன்,தாயப்பன், பரந்தாமன் ஆகியோரும் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் ஐந்து பேரும் ஜாமீன் கோரி சென்னை-பூந்தமல்லியில் உள்ள பொடா தனி நீதிமன்றத்தில் மனுக்களைத்தாக்கல் செய்திருந்தனர். ஆனால் அந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள்மீதான விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி என். தினகர் மற்றும் நீதிபதி ஆர். பாலசுப்பிரமணியன் ஆகியோர்அடங்கிய பெஞ்ச் முன் நாளை நடைபெறவுள்ளது.
இதற்கிடையே புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக நெடுமாறன் மீது புதிய வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.திண்டுக்கல்-செம்பட்டியில் கடந்த 1991ம் ஆண்டும், கொடைக்கானல்-தாண்டிக்குடியில் 1993ம் ஆண்டும் அவர்புலிகளை ஆதரித்துப் பேசியதாக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
ஏற்கனவே திருச்செந்தூர் நீதிமன்றத்திலும் நெடுமாறன் மீது தொடரப்பட்ட ஒரு புலிகள் தொடர்பான வழக்குவிசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீன் கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ள முதல் முக்கியத் தலைவர் நெடுமாறன்தான். நான் ஜாமீன் கோர மாட்டேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால், தான் கைது செய்யப்பட்ட பொடா சட்டத்தின் 21வது பிரிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார்வைகோ.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications