பூட்டிய வீடுகளில் திருடிய பெண்கள் கும்பல் கைது
நாகர்கோவில்:
நாகர்கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பூட்டிய வீடுகளில் புகுந்து நகை, பணம் திருடிய 6 பெண்களைபோலீஸார் கைது செய்தனர்.
நாகர்கோவில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பூட்டிய வீடுகளை உடைத்து நகை, பொருட்களைத் திருடுவதுஅதிகரித்து வந்தது.
இதையடுத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆறு பெண்கள் போலீஸாரிடம்சிக்கினர்.
இந்தப் பெண்கள் பிளாஸ்டிக் பாத்திரங்களை விற்பது, பழைய பேப்பர்களை வாங்குவது என்ற போர்வையில்நகரில் நடமாடிக் கொண்டே, எந்தெந்த வீடுகளெல்லாம் பூட்டிக் கிடக்கின்றன என்று நோட்டமிட்டுக்கொள்வார்கள்.
பின்னர் இரவில் அந்தப் பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம், பாத்திரம் உள்ளிட்ட பொருட்களைத்திருடிச் சென்று விடுவார்கள்.
இதுதொடர்பாக "சில்க்" சரசு உள்ளிட்ட 6 பெண்களை போலீஸார் கைது செய்துள்ளனர். "சில்க்"தான் இந்தகும்பலுக்கு தலைவி போல செயல்பட்டு வந்துள்ளார்.
இந்தப் பெண்கள் கும்பலிடம் இருந்து ரூ.70,000 மதிப்புள்ள நகை மற்றும் பொருட்களைப் போலீசார்கைப்பற்றினர். இதில் 3 பெண்களுக்கு கைக் குழந்தைகள் உள்ளன.
-->












Click it and Unblock the Notifications