வேலூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது: போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதைத் தொடர்ந்து வேலூர்-சிதம்பரம் இடையே ரயில் போக்குவரத்துஇன்று பாதிக்கப்பட்டது.
வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையத்திலிருந்து சிதம்பரத்திற்கு இன்று காலை அரிசி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு ரயில் கிளம்பியது.
ஆனால் கிளம்பிய சிறிது நேரத்திலேயே அந்தச் சரக்கு ரயிலின் நான்கு பெட்டிகள் திடீரென்று தண்டவாளத்தைவிட்டு தடம் புரண்டு கவிழ்ந்தன.
இதனால் அந்தப் பெட்டிகளிலிருந்த அரிசி மூட்டைகள் கீழே சிதறி விழுந்தன.
இதையடுத்து வேலூர்-சிதம்பரம் மீட்டர்கேஜ் பாதையில் அனைத்து ரயில்களும் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.ரயில் பாதையைச் சரிசெய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்திற்குத் தீவிரவாதிகளின் சதி காரணமா என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
-->












Click it and Unblock the Notifications