ஒரு வாரத்தில் ரூ.30 லட்சம் மதிப்பு திருட்டு வி.சி.டிக்கள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திருட்டு வி.சி.டி. விற்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று தமிழக காவல் துறை எச்சரித்துள்ளது.

சென்னை நகரில் திருட்டு வி.சி.டிக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக ஒரு படம்திரையிட முடியவில்லை. புதுப் படம் தியேட்டருக்கு வருவதற்கு முன்பே அந்தப் படத்தின் வி.சி.டி. வெளியாகி,படத்தைப் போண்டியாக்கி விடுகிறது.

திருட்டு வி.சி.டிக்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்துதான் சென்னைக்குவருகின்றன. இவற்றைக் கடத்தி வருபவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி சமீபத்தில்தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து திருட்டு வி.சி.டியைப் பறிமுதல் செய்யும் வேட்டையைப் போலீஸார் தீவிரப்படுத்தினர். இதன்பயனாக, தினசரி நூற்றுக்கணக்கான திருட்டு வி.சி.டிக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சென்னையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள திருட்டு வி.சி.டிக்கள் கைப்பற்றப்பட்டன.மேடவாக்கம், துரைப்பாக்கம், திருவான்மியூர், பாலவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த வேட்டையில் ரூ.10லட்சம் மதிப்புள்ள 3,000 திருட்டு வி.சி.டிக்கள் பிடிபட்டன.

இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருட்டு வி.சி.டிக்களை விற்பனை செய்வோர், வாடகைக்கு விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதிருட்டு வி.சி.டி. வேட்டைக்கான சிறப்புப் போலீஸ் படையின் அதிகாரி சுந்தரமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+