For Daily Alerts
Just In
"சாத்தன்குளத்தில் எங்களுக்கே வெற்றி": காங். நம்பிக்கை
சென்னை:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தருமாறு திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவைக் கோரவுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ்சென்னிதாலா கூறினார்.
பாண்டிச்சேரியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த அவர் கூறுகையில்,
சாத்தான்குளம் தொகுதியில் நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம். முன்பை விட காங்கிரஸ் கட்சி இப்போது அதிகபலத்துடன் உள்ளது. திமுக உள்ளிட்ட முக்கியக் கட்சிகளின் ஆதரவையும் கோரவுள்ளோம்.
பவானி ஆற்றின் குறுக்கே கேரளஅரசு அணை கட்டுவது தொடர்பாக, சுமூகத் தீர்வு காண தமிழக காங்கிரஸ் கட்சிஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபட்டுள்ளது என்றார் சென்னிதாலா.


