த்ரிஷா குறித்து அசிங்கமாக பேசிய திமுக நிர்வாகி.. கனிமொழிக்கு வந்துச்சே கோபம்.. மேடையில் களேபரம்!
தூத்துக்குடி: சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கடுமையாக போராடியது. ஆனால் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சியானது. இந்த தோல்வி திமுகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் மற்றும் தவெக மீது திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. தூத்துக்குடியில் கனிமொழி முன்னிலையில் ஒரு நிர்வாகி த்ரிஷா குறித்து தவறாக பேசியுள்ளார். அப்போது கனிமொழி குறுக்கிட்டு அவரை கண்டித்து அறிவுரை வழங்கினார். என்ன நடந்தது.
சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் உதவியுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. தேர்தல் தோல்வியால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் தவெக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள். முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ், தவெக மீது அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்தார். அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அதே மாவட்டத்தில் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது.

கனிமொழி கூட்டம்
சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து திமுக மாவட்டம், தொகுதி வாரியாக ஆய்வு செய்து வருகிறது. திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, நம்மை நாம் பலப்படுத்திக்கொண்டால் கூட்டணி இல்லாமலேயே வெற்றி பெற முடியும். விரைவில் நம்முடைய பலத்தை நிரூபிப்போம். கூட்டணி பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. யாருடைய ஆதரவும் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியும் என்று பேசியுள்ளார்.
கனிமொழி தூத்துக்குடி மாவட்ட திமுகவினருடன் ஆலோசனை நடத்தி வருகிறார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கனிமொழி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் அந்த மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொரு நிர்வாகியும், திமுக தோல்வி குறித்து தங்களின் கருத்துகளை பேசினர்.
த்ரிஷா குறித்து சர்ச்சை
அப்போது ஒரு திமுக நிர்வாகி நடிகை த்ரிஷா குறித்து தவறாக பேசினார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. கனிமொழி துளி கூட தாமதமில்லாமல் உடனடியாக குறுக்கிட்டு அந்த நிர்வாகியை கண்டித்தார். "எந்த பெண் குறித்தும் நாம் அவதூறாக பேசக் கூடாது. நாம் திமுகவைச் சேர்ந்தவர்கள். அதனால் பெண்கள் குறித்து நாம் தரக்கறைவாக பேசக் கூடாது" என்று மேடையில் அறிவுறுத்தினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications