காவேரி மணியத்துக்கு ஸ்டாலின் கோஷ்டி எதிர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை திமுக பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள காவேரி மணியம் கட்சித் தலைவர் கருணாநிதியின் மகனானமு.க. அழகிரியைச் சந்தித்தார்.

மதுரையில் அழகிரி- ஸ்டாலின்- பழனிவேல் ராஜன் ஆகியோர் தனித் தனி கோஷ்டி நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் திமுக சார்பில் நடந்த வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கான போஸ்டரில் அழகிரியின் பெயரைத்தவிர்த்து விட்டு போஸ்டர் ஒட்டப்பட்டது. இது அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பைஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து வீரவணக்க நாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த மாணவர் அணி செயலாளரான கிரம்மர் சுரேஷ்கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் ஸ்டாலினின் ஆதரவாளராவார். இந்த கோஷ்டிப் பூசலால்மனம் வெறுத்த கட்சியின் தலைவர் கருணாநிதி மதுரை திமுக நிர்வாகிகளை கூண்டோடு நீக்கினார்.

கட்சியின் புதிய மாவட்டப் பொறுப்பாளராக காவேரி மணியம் நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை திமுகவில் குழப்பம்ஏற்படுத்தி வருவோருக்கு இதுவே கடைசி எச்சரிக்கை என்றும் கருணாநிதி கூறிள்ளார்.

புதிய பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள காவேரி மணியம் திமுக இளைஞரணிச் செயலாளரான ஸ்டாலின்மற்றும் அழகிரி ஆதரவாளர்களுக்கிடையே நிலவும் பூசலைத் தணிக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

இதன் முதல் கட்டமாக, அழகிரியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து கட்சிப் பணிகள் குறித்து விவாதித்தார்.

அப்போது அழகிரிக்கு பொன்னாடை போர்த்திய காவேரி மணியம், தனக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

"இன்று முதல் கட்சி நிர்வாகம் சிறப்பாக நடக்கும். எனது முழு ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு. எந்தப்பிரச்சினையும் கிளம்பாது" என்று அழகிரி உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் காவேரி மணியம், கட்சிஅலுவலகத்திற்கு சென்று பிற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

காவேரி மணியத்தை அழகிரியின் அனுதாபி என்று ஸ்டாலின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இவரை கட்சியின்பொறுப்பாளராக நியமித்துள்ளது ஸ்டாலின் ஆதரவாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் தொடர்ந்துபொறுமலுடன் உள்ளனர். இருந்தாலும் கருணாநிதி தற்போது கடும் கோபத்தில் இருப்பதால் இப்போதைக்குகொஞ்சம் அடக்கி வாசிப்போம் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

காவேரி மணியத்தை அவர்கள் இதுவரை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்லவில்லை. தொலைபேசியிலேயேவாழ்த்தியதாக கூறப்படுகிறது.

பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் ஆதரவாளரான மதுரை மேயர் செ. ராமச்சந்திரனும், காவேரி மணியத்தைசந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+