வறட்சி: விவசாயிகளுக்கு ரூ. 5 கோடி நிதி வழங்க அரசு ஊழியர்கள் முடிவு
சென்னை:
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவ அரசு ஊழியர்கள் முன்வந்துள்ளனர்.
தங்களது ஒரு நாள் ஊதியத்தை விவசாயிகளுக்கு நிவாரணமாக வழங்க உள்ளனர். தமிழக அரசு ஊழியர்களின் ஒட்டுமொத்த ஒருநாள் ஊதியம் ரூ. 5 கோடியாகும்.
பிப்ரவரி மாதத்தில் தங்களது ஒரு நாள் ஊதியத்தைப் பிடித்தம் செய்து அதை விவசாயிகள் நிவாரணத்துக்கு தருமாறு முதல்வர்ஜெயலலிதாவிடம் வலியுறுத்த அரசு ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு ஊழியர் சங்கத்தினர் சில நாட்களில் ஜெயலலிதாவைச் சந்திப்பார்கள் என்று தெரிகிறது.
சமீப காலமாக முதல்வருக்கும் அரசு ஊழியர் சங்கத்தினருக்கும் இடையே நல்லுறவு இல்லை. ஊழியர்களின் சலுகைகளை நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி அரசு பறித்துள்ளது. இதனால் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர் ஊழியர்கள்.
இந் நிலையில் தங்களது சுய கோரிக்கைகளை விட்டுவிட்டு விவசாயிகள் பிரச்சனைக்காக இறங்கி வந்துள்ளனர் அரசு ஊழியர்கள்.அவர்கள் நிச்சயம் பாராட்டுக்குறியவர்களே.
-->












Click it and Unblock the Notifications