For Daily Alerts
Just In
சென்னையில் ரூ.5 லட்சம் தங்க நகைகள் துணிகர கொள்ளை
சென்னை:
சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வீட்டின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த நபர்கள்அங்கிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், பொருட்களைத் திருடிச் சென்றனர்.
புரசைவாக்கம், கெல்லீஸ் பகுதியில் வசித்து வருபவர் சையத் இப்ராகிம். அவர் தற்போது அமெரிக்காசென்றுள்ளார். இதையடுத்து வீட்டைப் பராமரிக்கும் பொறுப்பை தனது உறவினர்களிடம் கொடுத்திருந்தார்.
இந்நிலையில் இப்ராகிமின் வீட்டு ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த ரூ.5 லட்சம்மதிப்புள்ள தங்க நகைகள், சில விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கீழ்ப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலேயே திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது அப்பகுதி மக்களைஅதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


