தமிழக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாய் வெளியேற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் இருந்து இன்று திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாய அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இன்று அவை கூடியதும் எழுந்த திமுக உறுப்பினர் துரைமுருகன்,

நேற்று காவிரிப் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதம் நடந்தது. அப்போது திமுக துரோகம் செய்ததாக பேசப்பட்ட விவாதங்கள்அவைக் குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அதிமுக துரோகம் செய்ததாக நாங்கள் கூறிய வாதங்களை அவைக் குறிப்பில்இருந்து நீக்கியுள்ளீர்கள்.

இது என்ன நியாயம்? உங்களுக்கு ஒரு நியாயம் அடுத்தவனுக்கு ஒரு நியாயமா? சபாநாயகர் இதில் நடுநிலையுடன் செயல்பட்டு தவறைசரி செய்ய வேண்டும் என்றார்.

இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது பேசிய காளிமுத்து, நேற்று பெய்த மழைக்கு இன்றைக்கு குடை பிடிக்க முடியாது. பேசாமல் உட்காருங்கள் என்றார்.

ஆனால், எங்களுக்கு நியாயம் வேண்டும் என்று கேட்டு திமுகவினர் தொடர்ந்து ஆர்பாட்டம் செய்தனர்.

இதையடுத்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, அவை நடவடிக்கைகளை இடையூறு செய்வதையே திமுக தனது வழக்கமாகக்கொண்டிருக்கிறது. இவர்கள் அவை நடவடிக்கைகளை குந்தகம் செய்யும் நோக்கத்துடன் வந்துள்ளனர். இதனால் திமுக உறுப்பினர்களைஉடனே வெளியேற்ற வேண்டும் என்றார்.

இதையடுத்து துரைமுருகனுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவகும் ஒருவரை ஒருவர் விரலை நீட்டிப்பேசிக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அன்பழகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் சபாநாயகர் காளிமுத்துவின் இருக்கையை சூழ்ந்து நின்றுஅரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களுக்கு எதிராக அமைச்சர்களும் அதிமுக எம்.எல்.ஏக்களும் சத்தம் போட அவையில் பெரும்குழப்பமும் பரபரப்பும் ஏற்பட்டது.

இந் நிலையில் அவையின் முன்னவரும் நிதியமைச்சருமான பொன்னையன் எழுந்து, திமுக எம்.எல்.ஏக்களை அவைக் காவலர்களைக்கொண்டு வெளியேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தைப் படித்தார். இதை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஏற்றதையடுத்து சபைக் காவலர்களைஉள்ளே அழைத்தார் சபாநாயகர் காளிமுத்து.

இதையடுத்து சபை மண்டபத்துக்கு வெளியே நின்றிருந்து அவைக் காவலர்கள் (போலீசார்) உடனே உள்ளே நுழைந்து ஆர்பாட்டம் செய்துகொண்டிருந்த திமுக எம்.எல்.ஏக்களை வெளியே இழுத்துச் சென்றனர்.

முரண்டு பிடித்த திமுகவினரை குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றனர். அப்போதும் திமுக எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவையும்காளிமுத்துவையும் எதிர்த்து கோஷமிட்டவாரே இருந்தனர்.

வெளியேற்றப்பட்ட துரைமுருகன் நிருபர்களிடம் பேசுகையில்,

இவர்கள் (அதிமுக) மட்டும் 1964ம் ஆண்டு நடந்த விஷயத்தைப் பற்றி இப்போது பேசுவார்களாம். ஆனால், நாங்கள் நேற்று நடந்த ஒருவிஷயத்தைக் கூட இன்று பேசக் கூடாதாம். இது என்ன நியாயம்?

சபாநாயகர் காளிமுத்து ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டார் என்று பகிரங்க புகார் சொன்னதால் எங்களை காவல்களை வைத்துகுண்டுக்கட்டாகத் தூக்கி வெளியே போட்டிருக்கிறார்கள் என்றார்.

திமுகவினர் வெளியேற்றப்பட்டதையடுத்து எழுந்த காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், சபாநாயகர்சொன்னதைத் தான் திமுகவினர் மறுத்து கேள்வி எழுப்பினர். அதற்காக அவையின் முக்கிய எதிர்க் கட்சியை வெளியேற்றிவிட்டு அவையைநடத்துவது டூ மச் என்றார்.

அவருக்கு பதிலளித்த ஜெயலலிதா, திமுகவினரை வெளியேற்ற வேண்டும் என்பது எங்கள் எண்ணமில்லை என்றார்.

இதையடுத்து திமுகவினரை உள்ளே வருமாறு சபாநாயகர் அழைத்தார். ஆனால், அவர்கள் வர மறுத்துவிட்டனர்.

கருணாநிதி, ராமதாஸ் மீது பாய்ச்சல்:

இதன் பின்னர் பேசிய ஜெயலலிதா, காவிரி விவகாரம் இப்போது இவ்வளவு குழப்பமடைந்தற்கு கருணாநிதியும் ராமதாசும் தான் காரணம்.1998ம் ஆண்டு கருணாநிதியின் நெருக்குதலால் நடுவர் மன்றம் அமைக்கப்பட்டபோதே அதை எதிர்த்தேன்.

பின்னர் இந்த நடுவர் மன்றத்தை எதிர்க்குமாறு மத்திய அரசில் இடம் பெற்ற ராமதாசிடம் கோரினேன். அவரும் எதிர்க்கவில்லை. இந்தமன்றத்துக்கு எந்த அதிகாரமும் இல்லாததால் தான் அதை நாங்கள் எதிர்த்தோம் என்றார் ஜெயலலிதா.

இது டான்சி அல்ல: கருணாநிதி சூடு

இந் நிலையில் காவிரி ஒப்பந்தத்தை 1974ம் ஆண்டு ஆட்சியில் இருந்த திமுக அரசு புதுப்பிக்காததால் தான் இவ்வளவு பிரச்சனைகள்ஏற்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா கூறிய குற்றச்சாட்டை கருணாநிதி மறுத்துள்ளார்.

இது குறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

செயல்படாத இந்த அதிமுக அரசால் தமிழகத்தில் குடிக்கவும் விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. விவசாயிகளையேபட்டினி போட்டுவிட்ட அதிமுக இப்போது தனது தவறை மறைக்க திமுக மீது பழி போடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

காவிரி ஒப்பந்தம் என்பது மத்திய அரசின் மேற்பார்வையில் இரு மாநில அரசுகளால் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், இதில் 1974ம்ஆண்டில் கையெழுத்திட கர்நாடகம் முன் வரவில்லை. இதனால் தான் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

இது டான்சி நிலத்தை அபகரித்தது மாதிரி ஒரே நொடியில் கையெழுத்துப் போட்டுவிடும் விஷயம் அல்ல. இரு மாநில அரசுகள் பேசிமுடிவெடுக்க வேண்டியது.

நாங்கள் தவறு செய்ததாகக் கூறும் ஜெயலலிதாவுக்கு ஒரு கேள்விய 1977ம் ஆண்டில் இருந்து அதிமுக தானே ஆட்சியில் இருந்தது.கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசும் பின்னர் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசும் அந்தஒப்பந்தத்தை ஏன் புதுப்பிக்கவில்லை? இதற்கு யாரை குறை சொல்லப் போகிறீர்கள்?

இரு மாநில அரசுகளும் பேசி இரு மாநிலங்களும் கையெழுத்திட்டால் தான் அது சட்டப்படியான ஒப்பந்தமாகும். தமிழ்நாடு மட்டும்கையெழுத்துப் போட்டிவிட்டால அது ஒப்பந்தம் ஆகாது. அதற்கு நெடு நேரமும் ஆகாது.

ஆனால், இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தாலும் சட்டசபையில் தனது கட்சி எம்.எல்.ஏக்களின் கைத் தட்டலைப் பெற வேண்டும்என்பதற்காகவும், திமுக மீது பழி போடவும், மக்களை ஏமாற்றவும் பொய்யான தகவல்களை ஜெயலலிதா சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தனது அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+