சாத்தான்குளம் இடைத் தேர்தல்: நீலமேகவர்ணம் வேட்பு மனு தாக்கல் செய்தார்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தொகுதி அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் இன்று தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல்செய்தார்.
சாத்தான்குளம் இடைத் தேர்தல் வரும் 26ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
குறிப்பாக, அதிமுகவினர் சாத்தான்குளம் தொகுதியில் படு சுறுசுறுப்புடன் தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.சாத்தான்குளம் ஒன்றியத் தலைவரான நீலமேகவர்ணமும் அப்படித்தான் தேர்தல் பணிகளை ஓடியாடிக் கவனித்துக்கொண்டிருந்தார்.
தேர்தல் விளம்பரத்திற்காக ஒரு சுவற்றில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தபோதுதான் அதிமுக வேட்பாளராகதான் அறிவிக்கப்பட்டது நீலமேகவர்ணத்துக்குத் தெரிய வந்தது.
அதிமுக வேட்பாளரும் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. அதிமுகவினர்முழுவீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று நீலமேகவர்ணம் தன்னுடைய வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
தன் சொந்த ஊரான படுக்கப்பத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, பின்னர் அருகில் மற்றகிராமங்களில் உள்ள எம்.ஜி.ஆர். உள்ளிட்ட முக்கியத் தலைவர்களின் சிலைகளுக்கும் மாலை அணிவித்த பின்சாத்தான்குளம் வந்தார் நீலமேகவர்ணம்.
பின்னர் பொதுப்பணித் துறை அமைச்சரும் அதிமுக தேர்தல் பணிக் குழுவின் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம்தலைமையில் சாத்தான்குளத்தில் அதிமுகவினருடன் ஊர்வலமாகச் சென்ற நீலமேகவர்ணம், இன்று பகல் சுமார் 1மணிக்கு உதவித் தேர்தல் அதிகாரியிடம் தன் மனுவைத் தாக்கல் செய்தார்.
இதற்கிடையே இந்து நாடார் வகுப்பைச் சேர்ந்த நீலமேகவர்ணத்துக்குப் போட்டியாக சிறுபான்மை கிருஸ்தவநாடார் வகுப்பைச் சேர்ந்த ஒருவரை காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பெரும்பான்மையான இந்து ஓட்டுக்களைக் கவருவதற்காக இந்து நாடார் வகுப்பைச் சேர்ந்த ஒருவரையேகாங்கிரஸ் கட்சியும் தன் வேட்பாளராக அறிவிக்கும் என்று தற்போது கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு நாட்களில்தன் வேட்பாளரை அறிவிக்கவுள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications