ஒதுக்கியது திமுக: இறங்கி வருகிறது பா.ஜ.க.
சென்னை:
திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாகநடத்தப்பட்ட அனைத்து எதிர்க் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்துக்கு பா.ஜ.கவுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.
எதிர்க் கட்சிகளால் முழுமையாக ஒதுக்கப்பட்டதால் பா.ஜ.க. இன்று அதிமுகவுக்கு எதிராகக் கருத்துத்தெரிவித்துள்ளது.
த.மா.கா.கா. தலைவர் டாக்டர் குமாரதாஸைக் கொலை செய்துவிடுவேன் என்று சட்டசபையில் பரிதி மிரட்டியதாகக்கூறி நள்ளிரவில் அவரைக் கைது செய்தது தமிழக அரசு.
பரிதி கைது செய்யப்பட்டால் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் என்றும், மாநிலஅளவில் கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அது தொடர்பாக எதிர்க் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திமுடிவெடுப்போம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியிருந்தார்.
அதன்படி நேற்று இக் கூட்டம் நடந்தது. தி.நகரில் ஒரு தனியார் ஹோட்டலில் நடந்த க் கூட்டத்துக்கு காங்கிரஸ்,மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் உள்ளிட்டகட்சிகளுக்கு திமுக அழைப்பு விடுத்தது. இதையடுத்து அனைத்து எதிர்க் கட்சியினரும் கூட்டத்தில் பங்கேற்றுகருணாநிதியுடன் ஆலோனை நடத்தினர்.
பா.ஜ.கவைத் தவிர்த்துவிட்டு அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசியதால் அக் கட்சிக்கு திமுக முழுமையாகமுழுக்கு போட்டுள்ளது.
கடந்த வாரம் சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் பல விவகாரங்களில் வெளிநடப்பு செய்தபோதும் பா.ஜ.க. மட்டும்அவையை விட்டு வெளியே வரவில்லை. அதிமுகவை அரசை ஆதரித்து அவையிலேயே இருந்தது.
மேலும் பரிதி கைது செய்யப்பட்ட சம்பவத்தையும் இதுவரை பா.ஜ.க. கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது.
இறங்கி வரும் பா.ஜ.க:
இந் நிலையில் எதிர்க் கட்சிகளால் தனித்து விடப்பட்டாதால் பா.ஜ.க. இன்று இறங்கி வந்துள்ளது.
சட்டமன்றத்தில் நடந்த சம்பவத்துக்கு திமுக எம்.எல்.ஏ. பரிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டதைபா.ஜ.க. கண்டித்து அறிக்கை விட்டுள்ளது.
இது குறித்து பா.ஜ.க. தேசியச் செயாலாளர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சட்டமன்றத்தில் ஒரு கட்சியின் உறுப்பினர் வரம்பு மீறிப் பேசும்போது அதைத் தடுத்த நிறுத்த வேண்டியதுசபாநாயகரின் கடமையாகும். அதைவிட்டுவிட்டு சபாநாயகர் ஒரு சாராருக்கு ஆதரவாகச் செயல்பட்டது தவறு.
ஒரு உறுப்பினர் வரம்பு மீறிப் பேசியதும், அதற்காக அவரை இன்னொரு உறுப்பினர் அடிக்கப் பாய்ந்ததும் தவறு.
ஆனால், தாக்கப் பாயந்த பரிதி இளம் வழுதியை பிற திமுக எம்.எல்.ஏக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. இதனால் பரிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்து அவரைக் கைது செய்தது தவறு.
அரசியல் கட்சித் தலைவர்களை தனது அறைக்கு அழைத்து இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல்சபாநாயர் காளிமுத்து விவாதித்து இருக்க வேண்டும். பரிதியைக் கைது செய்தது என்பது மிக அதிகபட்சமானசெயலாகும்.
இவ்வாறு இல.கணேசன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-->












Click it and Unblock the Notifications