பரிதி கைது விவகாரம்: கண்டன பொதுக் கூட்டம் நடத்த எதிர் கட்சிகள் முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அடுத்த ஒரு வாரத்திற்குள்சென்னையில் கண்டனப் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த எதிர்க் கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்தக் கூட்டத்தில்பா.ஜ.க. தவிர அனைத்து எதிர்க் கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

கடந்த வாரம் தமிழக சட்டசபையில் த.மா.கா.கா. எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸைத் தாக்கமுயற்சித்ததற்காகவும், அவரைக் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதற்காகவும் பரிதி மேல் கிரிமினல்நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து கடந்த 31ம் தேதி நள்ளிரவில் பரிதியின் வீட்டிற்குச் சென்ற தமிழகப் போலீசார் அவரைக் கைதுசெய்தனர்.

பரிதி மேல் இத்தகைய நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் காளிமுத்து மீது நம்பிக்கையில்லா தீர்மானம்கொண்டுவருவது குறித்து எதிர்க் கட்சிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுப்போம் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியிருந்தார்.

அதன்படி நேற்று மாலை சென்னையில் உள்ள ஜி.ஆர்.டி. கிராண்ட் டேஸ் ஹோட்டலில் கருணாநிதி தலைமையில்எதிர்க் கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது.

பரிதி கைதைக் கண்டித்து சென்னையில் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பா.ஜ.கவைத் தவிர அனைத்து எதிர்க் கட்சிகளும் கண்டனப்பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றன.

நேற்றைய எதிர்க் கட்சிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி நிலையைப் போக்கும் பணிகளில் ஈடுபடாமல்,சர்வாதிகாரப் போக்குடன் நடந்து கொண்டிருக்கும் காளிமுத்துவையும், முதல்வர் ஜெயலலிதாவையும் இந்தக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது.

சட்டசபை கூட்டத் தொடர்களிலிருந்து பரிதி சஸ்பெண்ட் செய்யப்பட்டதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்என்று அனைத்து எதிர்க் கட்சித் தலைவர்களும் அளித்த கோரிக்கை மனுவை நிராகரித்து, அவரை நள்ளிரவில்கைது செய்திருப்பது கொடுமையானது.

பரிதி மீதான குற்றச்சாட்டுக்களை தமிழக அரசு உடனடியாக வாபஸ் பெற்றுக்கொண்டு அவரை உடனடியாகவிடுதலை செய்ய வேண்டும். இவ்விஷயத்தில் அரசு வீண் பிடிவாதம் பிடித்தால் எதிர்க் கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்துஅறவழியிலான போராட்டங்களில் ஈடுபடும்.

முதற்கட்டமாக அடுத்த ஒரு வாரத்திற்குள் சென்னையில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் கண்டனப்பொதுக் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

பரிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்என்று முதலில் கூறிய திமுக தற்போது பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+