களம் இறங்கினார் குமாரதாஸ்: சாத்தான்குளத்தில் அதிமுகவுக்காக பிரசாரம்
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தொகுதி அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணத்திற்காக தமிழ் மாநில காமராஜர் காங்கிரஸ் கட்சியின்(த.மா.கா.கா) தலைவர் டாக்டர்குமாரதாஸ் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதிமுக ஆதரவுடன் காங்கிரசை உடைத்து த.மா.கா.காவை உருவாக்கினார் குமாரதாஸ். சமீபத்தில் திமுகஉறுப்பினர் பரிதி இளம்வழுதியுடன் சட்டமன்றத்தில் மோதல் ஏற்பட்டதையடுத்து குமாரதாசுக்கு போலீஸ்பாதுகாப்பை வழங்கியுள்ளது தமிழக அரசு.
இப்போது சாத்தான்குளத்தில் அதிமுகவுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள குமாரதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
சட்டசபையில் பரிதிஇளம் வழுதி எம்.எல்.ஏ. என்னைத் தாக்கியதை கண்டிக்காத எதிர்க்கட்சிகளைக்கண்டிக்கிறேன். இந்தக் கட்சிகள் பரிதிக்கு ஆதரவாக செயல்படுகின்றன.
தோல்வியைச் சந்திக்கும் தைரியம் இல்லாத காரணத்தால்தான் திமுக இங்கு போட்டியிடவில்லை. அதுமட்டுமல்லாது, பிற எதிர்க் கட்சிகளும் தோல்வியைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில்தான் எந்தக் கட்சிக்கும்அது வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை.
எங்கள் கட்சியின் எம்.எல்.ஏவான ஹக்கீமும் விரைவில் இங்கு அதிமுகவுக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்என்றார் குமாரதாஸ். ஹக்கீமுக்கும் அரசு போலீஸ் பாதுகாப்பு தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
காங். தேர்தல் குழு:
இதற்கிடையே சாத்தான்குளம் தொகுதியில் தேர்தல் பணிகளைக் கவனிக்க காங்கிரஸ் தலைவர் சோ.பாலகிருஷ்ணன்,செயல்தலைவர் இளங்கோவன் தலைமையில் 25 பேர்கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவினர் விரைவில் தொகுதிக்குச் சென்று தேர்தல் பணிகளில் ஈடுபடுவர் என்று மாநில காங்கிரஸ்கட்சியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் சார்பில் வழக்கறிஞர் மகேந்திரன் போட்டியிடுகிறார்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications