தண்டவாளம் சிதைப்பு: ரயிலைக் கவிழ்க்க நக்சல்கள் சதி?
தர்மபுரி:
ஊத்தங்கரை அருகே தண்டவாளத்தை சேதப்படுத்தி ரயிலைக் கவிழ்க்க சதி நடந்துள்ளது.
சென்னை- சேலம் மார்க்கத்தில் உள்ள பொம்மிடி என்ற இடத்தில் இச் சம்பவம் நடந்தது. இதன் பின்னணியில் நக்சலைட்டுகள்இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 4 மணியளவில் பொம்மிடி ரயில் நிலையத்தின் கேங்மேன் ஒருவர் வழக்கமான சோதனையில்ஈடுபட்டிருந்தபோது ஓரிடத்தில் தண்டவாளம் விரிசலாகிக் கிடந்ததைப் பார்த்தார். உடனே ஓடிச் சென்று அதிகாரிகளுக்குத்தகவல் தந்தார்.
இதையடுத்து அந்தப் பாதையில் வந்த எல்லா ரயில்களும் சில நிமிடங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இந்தப் பிளவுகண்டுபிடிக்கப்பட்டபோது அந்த வழியே சமையல் கேஸ் ஏற்றிய சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயிலும் பொம்மிடிக்குசற்று முன்னதாக நிறுத்தப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்தனர். ரயில்வே இன்ஜினியர்கள் தண்டவாளத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.சுமார் 2 மணி நேரத்தில் தண்டவாளம் சரி செய்யப்பட்டது. இதன் பின்னர் தான் ரயில் போக்குவரத்து சீரானது.
சம்பவம் நடந்த இடத்தில் இதற்கு முன்பும் தண்டவாளத்தை சிதைக்கும் சதி நடந்துள்ளது. கிட்டத்தட்ட இதே இடத்தில் சிலமாதங்களுக்கு முன் டெட்டோனேட்டர்கள் கைப்பற்றப்பட்டன. இப் பகுதியில் சமீபத்தில் தான் 27 நக்சலைட்டுகள் கைதுசெய்யப்பட்டனர். மேலும் பலர் தலைமறைவாகிவிட்டனர்.
தப்பிவிட்ட நக்சலைட்டுகள் தான் ரயிலைக் கவிழ்க்க தண்டவாளத்தை சிதைத்து முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகம்போலீசார் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை தண்டவாளத்தை சீராக்கும் பணியால் சேலம், தர்மபுரி பஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications