இலங்கை கடற்படை மீண்டும் அட்டகாசம்: 16 தமிழக மீனவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களுடைய4 படகுகளையும் கைப்பற்றினர். மேலும் 2 படகுகளைத் தாக்கி அவற்றை மூழ்கடித்தனர்.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் சுமார் 800 படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவுஅருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கைக் கடற்படை வீரர்கள் அங்கு வந்தனர்.

இதையடுத்து தமிழக மீனவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் இரண்டு படகுகள் மட்டும்இலங்கை கடற்படையினரிடம் சிக்கிக் கொண்டன. அந்த இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர்துப்பாக்கிளால் சுட்டும், தங்களது படகுகளால் மோதியும் கடலில் மூழ்கடித்தனர்.

அந்தப் படகுகளில் இருந்த மீனவர்களான சூசைராஜ், நாதன், தேவசகாயம், ஆரோக்கியம், கிருஷ்ணகுமார்,சுதாகரம், சவரிமுத்து மற்றும் அலெக்ஸ் ஆகிய எட்டு பேரும் கடலில் குதித்து தப்பினர்.

அவர்களை மற்ற படகுகளில் இருந்த மீனவர்கள் காப்பாற்றி தங்களது படகுகளில் ஏற்றிக் கொண்டனர்.இருப்பினும், கரைக்குத் திரும்பிய பிறகு பார்த்தபோது, நான்கு படகுகளைச் சேர்ந்த 16 மீனவர்களைக்காணவில்லை என்பது தெரிய வந்தது. அவர்களைத் தேடி கடலுக்குள் சென்ற மீனவர்களும் வெறும் கையுடன்திரும்பி விட்டனர்.

இந்நிலையில் காணாமல் போன 16 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தது தெரியவந்துள்ளது. அவர்களுடைய நான்கு படகுகளையும் கூட இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 16 மீனவர்களும் பின்னர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று காலை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்காக 16 தமிழக மீனவர்களும் மீண்டும் போலீஸ் காவலிலேயேவைக்கப்பட்டுள்ளனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+