"கல்பனா-1" ஆகிறது "மெட்சாட்" செயற்கைக்கோள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணியில் ஏவப்பட்ட "மெட்சாட்" என்ற செயற்கைக்கோளுக்கு இந்தியவிண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கொலம்பியா ராக்கெட் வெடித்துச் சிதறியதில் அதிலிருந்த கல்பனா உள்ளிட்ட ஏழு விண்வெளிவீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர்.

இவர்களின் இறப்பையொட்டி இந்தியாவிலும், அமெரிக்காவிலும் பல்வேறு அஞ்சலி நிகழ்ச்சிகள் நடந்துவருகின்றன. நேற்று மாலை இந்திய நாடாளுமன்றத்திலும் சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது,"நாஸா" விண்வெளி உடையில் இருந்த கல்பனாவின் பெரிய புகைப்படம் ஒன்றை பிரதமர் வாஜ்பாய் திறந்துவைத்தார்.

அதன் பின்னர் வாஜ்பாய் பேசுகையில்,

கடந்த செப்டம்பர் 22ம் தேதி பி.எஸ்.எல்.வி.-4 ராக்கெட் மூலம் "மெட்சாட்" என்ற வானிலை ஆய்வுசெயற்கைக்கோளை நாம் ஏவியுள்ளோம்.

அந்த செயற்கைக்கோள் இனி "கல்பனா-1" என்று அழைக்கப்படும். விண்வெளி ஆய்வுக்காகச் சென்றுதிரும்பியபோது உயிரிழந்த கல்பனாவின் நினைவைப் போற்றும் வகையில் அந்த செயற்கைக்கோளுக்கு"கல்பனா-1" எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த வரிசையில் இனிமேல் அனுப்பப்படும் அனைத்து "மெட்சாட்" வகை செயற்கைக்கோள்களுக்கும்கல்பனாவின் பெயரே சூட்டப்படும்.

கல்பனா தன்னுடைய முதல் விண்வெளிப் பயணத்தின்போது 252 முறை பூமியைச் சுற்றி வந்துள்ளார். ஆனால்இரண்டாவது பயணத்தை அவர் வெற்றிகரமாக முடித்துவிட்டபோதிலும் மேலும் 16 நிமிடங்கள் விண்ணிலேயேசுற்றி விட்டு, பின்னர் பூமி திரும்பியிருந்தால் அவர் இப்போது உயிருடன் இருந்திருப்பார்.

செவ்வாய் கிரகத்திலும் போய் இறங்க வேண்டும் என்று கல்பனா கனவு கண்டிருந்தார். ஆனால் அந்தக் கனவுநனவாகவில்லை. ஆனால் அவரது கனவை நம் இளைஞர்கள் என்றாவது நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன்என்றார் வாஜ்பாய்.

இந்த அஞ்சலி நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷெகாவத், சபாநாயகர் மனோகர் ஜோஷி, முன்னாள்பிரதமர்களான ஐ.கே. குஜ்ரால், பி.வி. நரசிம்மராவ் உள்ளிட்ட தலைவர்களும், இந்திய விண்வெளித் ஆராய்ச்சிநிறுவனத்தின் தலைவரான கஸ்தூரி ரங்கனும் கலந்து கொண்டனர்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+