குவைத்திலிருந்து வந்த விமானத்தில் கோளாறு: திருச்சியில் நின்றது
திருச்சி:
குவைத் நாட்டிலிருந்து திருச்சிக்கு வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. ஆனாலும்பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கி விடப்பட்டனர்.
குவைத்திலிருந்து கோழிக்கோடு, திருச்சி வழியாக சென்னைக்குச் செல்லும் ஐஸி-994 விமானம் நேற்று முன்தினம்பகல் 11 மணிக்கு வழக்கம்போல் திருச்சிக்கு வந்து சேர்ந்தது.
திருச்சி விமான நிலையத்தில் தரை இறங்கிய அந்த விமானம் ஓடுபாதையில் சிறிது தூரம் ஓடிய பின்னர், திடீரென்றுமேற்கொண்டு நகராமல் நின்று விட்டது.
இதனால் அதிலிருந்த பயணிகள் சிறிது பதற்றம் அடைந்தனர். இருந்தாலும் பயணிகள் அனைவரும் அடுத்த சிறிதுநேரத்திலேயே விமானத்தை விட்டு பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர்.
இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டனர்.இயந்திரக் கோளாறு காரணமாகத்தான் அந்த விமானம் ஓடுபாதையில் நின்று விட்டதாக இந்தியன் ஏர்லைன்ஸ்அதிகாரி ஒருவர் கூறினார்.
மாலை 6 மணி வரை அந்த விமானம் ஓடுபாதையிலேயே நிறுத்தப்பட்டிருந்ததால் வேறு எந்த விமானமும்திருச்சியில் வந்து தரையிறங்க முடியவில்லை. பகல் 1 மணிக்கு கொழும்பிலிருந்து வரவேண்டிய விமானம் கூடஇரவு 7.30 மணிக்குத்தான் வந்து சேர்ந்தது.
இதற்கிடையே குவைத் விமானத்திலிருந்த இறக்கப்பட்ட பயணிகள் அனைவரும் பின்னர் ஏ.சி. கார்கள் மூலமேசென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications