பரிதி கைதை கண்டித்து இன்று எதிர்க் கட்சிகள் கண்டன பொதுக்கூட்டம்
சென்னை:
திமுக எம்.எல்.ஏவான பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் கலந்து கொள்ளும்பொதுக் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது.
சட்டசபையில் தமாகாகா எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸைத் தாக்குவதற்கு முயற்சி செய்தததாகவும், அவரைக்கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறி பரிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுமுடிவு செய்தது.
இதையடுத்து கடந்த ஜனவரி 31ம் தேதி நள்ளிரவில் பரிதி கைது செய்யப்பட்டார். இதைக் கடுமையாகக் கண்டித்தஎதிர்க் கட்சிகள் கடந்த 2ம் தேதி கூடி ஆலோசித்தன. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள பா.ஜ.கவுக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை.
பரிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பிப்ரவரி 8ம் தேதி (இன்று) கண்டனப் பொதுக் கூட்டம் நடத்த எதிர்க்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இன்று மாலை சென்னை-மயிலாப்பூரில் எதிர்க் கட்சியித் தலைவர்கள் கலந்து கொள்ளும் கண்டனப்பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோ. பாலகிருஷ்ணன், செயல்தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
மேலும் பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை, எம்.ஜி.ஆர். கழகம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.
"பரிதி மீதான நடவடிக்கை சரியே"- காளிமுத்து:
இதற்கிடையே பரிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சரிதான்என்று சபாநாயகர் காளிமுத்து கூறினார்.
சென்னையில் இன்று அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
பரிதி மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பதற்கான ஆதாரங்கள் அனைத்தும் உள்ளன. எனவே அவரைக் கைதுசெய்தது சரிதான்.
ஆனால் தன்னை டாக்டர் குமாரதாஸ் ஜாதி பெயர் கூறித் திட்டியதாக என்னிடம் எந்தப் புகாரும் அளிக்கவில்லை.அது தொடர்பாக அவர் போலீசாரிடம்தான் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது. எனவே இது தொடர்பாகபோலீசார் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் எப்போதும் நடுநிலையோடுதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார் காளிமுத்து.
ஜாமீன் கோரி பரிதி மனு:
இந்நிலையில், தான் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே கைது செய்யப்பட்டுள்ளதால் தன்னை ஜாமீனில்விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் பரிதி மனு தாக்கல்செய்துள்ளார்.
அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே என்னைக் கைதுசெய்துள்ளனர்.
என்னைக் குறித்து டாக்டர் குமாரதாஸ் அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குறிப்பிட்டு, அவர் மீதுநடவடிக்கை எடுக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளேன்.
ஆனால் குமாரதாஸ் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக இருக்கும் காரணத்தால் அவர் மீது ஒரு நடவடிக்கையும்எடுக்கவில்லை என்று பரிதி அம்மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு வரும் திங்கள்கிழமை நீதிபதி ராமலிங்கம் முன் விசாரணைக்கு வருகிறது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications