சம்பா சோகம்: மேலும் ஒரு விவசாயி தூக்கு போட்டு தற்கொலை
திருத்துறைப்பூண்டி:
சம்பா பயிர்கள் கருகியதால் பெண் விவசாயி அதிர்ச்சியில் இறந்த சம்பவம் அடங்குவதற்குள் பேராவூரணி அருகேஅதே காரணத்துக்காக இளம் விவசாயி ஒருவர் தன் வயலில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
காவிரியில் கர்நாடகம் தமிழகத்திற்கு நீர் திறந்து விடாததால் காவிரி டெல்டா பகுதிகளில் நீரின்றி சம்பா பயிர்கள்தொடர்ந்து கருகி வருகின்றன.
இதைப் பார்த்து பல விவசாயிகள் மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் இறந்துகொண்டிருக்கின்றனர். இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே திருத்துறைப்பூண்டி அருகே முத்துலட்சுமி என்ற பெண் விவசாயி தன் வயலில் சம்பாபயிரிட்டிருந்தார். இதற்காக ரூ.10,000 வரை அவர் கடன் வாங்கியிருந்தார்.
ஆனால் நீர் இல்லாமல் அவருடைய நிலத்தில் சம்பா பயிர்கள் வாடத் தொடங்கியதைக் கண்டு அவர் மன வேதனைஅடைந்தார். கடந்த சில நாட்களாக எப்போதும் இதே நினைவாக சோகமாகவே அவர் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை தன்னுடைய வயலுக்குச் சென்றிருந்தார் முத்துலட்சுமி. அங்கு சம்பா பயிர்கள் முற்றிலும்கருகிப் போய் சாய்ந்திருப்பதைக் கண்டு மிகவும் அதிர்ச்சி அடைந்த அவர், திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு அந்தஇடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார்.
சிறிது நேரம் கழித்து முத்துலட்சுமியின் உறவினர்கள் அவருடைய உடலை மீட்டு வீட்டுக்குக் கொண்டு வந்தனர்.
சம்பா பயிர்கள் கருகிய சோகத்தால் முத்துலட்சுமி இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications