8 அடி ஆழத்தில் புதைக்கப்பட்டிருந்த 8,000 திருட்டு வி.சி.டிக்கள்
சென்னை:
சென்னையில் 8 அடி ஆழ ரகசிய அறையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 8,000 திருட்டு வி.சி.டிக்களைப்போலீசார் கைப்பற்றினர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் திருட்டு வி.சி.டிக்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. திருட்டுவி.சி.டிக்களை ஒழிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட, புற்றீசல் போல் அவற்றின்எண்ணிக்கை பெருகிக் கொண்டேதான் உள்ளது.
இந்நிலையில் இன்று காலை சென்னை-பர்மா பஜாரில் சில கடைகளில் போலீசார் அதிரடிச் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு கடையின் தரைப் பகுதியில் ரகசிய அறை ஒன்று இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
அந்த ரகசிய அறைக்குள் சோதனை நடத்தியபோது, அதில் சுமார் 8,000 திருட்டு வி.சி.டிக்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர். அவை அனைத்துமே சமீபத்தில் வெளியானதிரைப்படங்கள் மற்றும் புளூ பிலிம் வி.சி.டிக்களாகும்.
அவற்றைக் கைப்பற்றிய போலீசார், இந்தத் திருட்டு வி.சி.டிக்களின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சம் என்று கூறினர்.தமிழகம் முழுவதும் இந்தத் திருட்டு வி.சி.டிக்களை விற்பனை செய்வதாக அந்தக் கடையின் உரிமையாளர் மஜீத்கூறினார்.
மஜீத்தைக் கைது செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications