சாலை வழியே நாடு திரும்புகின்றனர் வெளியேற்றப்பட்ட இந்திய, பாக் தூதர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட பாகிஸ்தான் தூதரும், பாகிஸ்தானில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்தியத் தூதரும்இன்று தங்களது நாடுகளுக்குத் திரும்புகின்றனர்.

காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதரகமே நேரடியாக நிதி உதவி செய்வதாகக் கூறி அதன் இந்தியத் தூதர பொறுப்புஅதிகாரி ஜலீல் அப்பாஸ் ஜிலானியை 48 மணி நேரத்தில் வெளியேற நேற்று முன் தினம் இந்தியா உத்தரவிட்டது.

மேலும் 4 பாகிஸ்தான் தூதரக ஊழியர்களையும் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதற்குப் பதிலடியாக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரக பொறுப்பு அதிகாரி சுதிர் வியாஸை பாகிஸ்தான் 48 மணிநேரத்தில் வெளியேற உத்தரவிட்டது. 4 அதிகாரிகளையும் வெளியேறச் சொன்னது.

இதையடுத்து இன்று இரு நாட்டுத் தூதரக அதிகாரிகளும் இந்தியா, பாகிஸ்தானில் இருந்து கார் மூலம் தங்களது நாடுகளுக்குப்புறப்பட்டனர். இவர்கள் பஞ்சாபில் உள்ள வாக் எல்லை வழியாக தங்களது நாடுகளை அடைவர்.

வெளியேற்றப்பட்ட ஒரு பாகிஸ்தான் தூதரக ஊழியர் இப்போது சவுதி அரேபியாவில் ஹஜ் பயணத்தில் உள்ளார். அவர் இனிஇந்தியா வர முடியாது. நேரடியாக அவர் பாகிஸ்தானுக்கே சென்று விடுவார். ஜீலானி கார் மூலம் புறப்பட்டாலும் மற்ற மூன்றுஊழியர்களும் ரயில் மூலம் பாகிஸ்தானுக்குப் புறப்பட்டனர்.

அதே நேரத்தில் இந்தியத் தூதரக அதிகாரி சுதிர் வியாசும், வெளியேற்றப்பட்ட மற்ற 4 ஊழியர்களும் கார் மூலம் டெல்லிபுறப்பட்டனர். இவர்கள் 12 மணி நேர பயணத்துக்குப் பின் இன்று இரவு டெல்லி வந்து சேருவர்.

சுதிர் வியாஸ் வெளியேற்றப்பட்டுவிட்டதால் விக்ரம் மிஸ்ரி தான் இனி இஸ்லாமாபாத்தில் இந்தியத் தூதரக பொறுப்புஅதிகாரியாக செயல்படுவார் என இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் மீது 2001ம் ஆண்டு தாக்குதல் நடந்தது முதல் இரு நாடுகளுமே தூதர்களை திரும்பஅழைத்துவிட்டன. இப்போது கீழ்நிலை அதிகாரிகள் தான் அந்தப் பொறுப்புகளில் உள்ளனர்.

நேபாளத்தில் பாக் தீவிரவாதம்:

இதற்கிடையே நேபாளத்தையும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளைத் தயார் செய்யும் முகாமாத பாகிஸ்தான் பயன்படுத்திவருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

நேபாளத்திலும் பங்களாதேசிலும் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளித்து வருவதாகஇந்தியா கூறியுள்ளது.

ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

அமெரிக்காவுக்கு வாஜ்பாய் சூடு:

தீவிரவாதம் குறித்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருவதாகஇந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இன்று நிருபர்களிடம் பேசிய பிரதமர் வாஜ்பாய்,

ஒசாமா பின் லேடனும் அவரது கும்பலும் இன்னொரு நாட்டை (ரஷ்யா) தாக்கினால் அது சுதந்திரப் போராட்டம். அதே நேரத்தில்வேறொரு நாட்டை (அமெரிக்கா) தாக்கினால் அவர்கள் தீவிரவாதிகள். இது என்ன நியாயம்?

தீவிரவாதம் குறித்த சில நாடுகள் போடும் இரட்டை வேடம் தான் தீவிரவாதிகளுக்கு பெரும் ஊக்கம் தந்து வருகிறது. அது தான்தீவிரவாதத்தையே வளர்த்து வருகிறது என்பதை சில நாடுகள் (அமெரிக்கா, பிரிட்டன்) உணர வேண்டும்.

சுதந்திர போராட்ட வீரர்கள் என்ற போர்வையில் தான் தீவிரவாதிகளுக்கு உதவியும் ஆயுதங்களும் தரப்பட்டு வருகின்றன.இதைத் தான் பாகிஸ்தான் செய்கிறது. ஆனால், இதை சில நாடுகள் (அமெரிக்கா) கண்டிக்கத் தயங்குகின்றன என்றார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+