திமுகவும் மேற்கு இந்தியத் தீவு அணி மாதிரி தான்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

உலகக் கோப்பைக் கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில், ஆரம்பத்தில் தடுமாறிய மேற்கிந்தியத் தீவுகள் அணி விடா முயற்சியோடுவிளையாடிவெற்றி கண்டதுபோல திமுவும் அதிமுகவை வெல்லும் என்று கருணாநிதிகூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் உலகக் கோப்பைகிரிக்கெட் பற்றித் தான அதிக நேரம் இன்பார்மலாக பேசிக் கொண்டிருந்தார்.

எவ்வளவு அரசியல் பணிகள் இருந்தாலும் எழுதுவதையும், முக்கிய கிரிக்கெட் போட்டிகளைப் டிவியில் பார்ப்பதையும்தவிர்க்கவே மாட்டார் கருணாநிதி.

இந் நிலையில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது.ஆனால், ஆரம்பத்தில் அந்த அணி மிகவும் தடுமாறியது. தென் ஆப்பிக்கா வெற்றி பெறும் போலத் தோன்றியது. ஆனால் விடாமுயற்சியோடு, தைரியமாக விளையாடி, இறுதியில் வெற்றிக் கனியைப் பறித்தது.

விடா முயற்சியோடு முயன்றால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இது ஒரு அன்மைக்கால உதாரணமாகும். அதுபோலவே, திமுவும்வெற்றிக் கனியை பறிக்கும்.

மேற்கு இந்திய அணி முதலில் மோசமாகத் தான் விளையாட ஆரம்பித்தது. முதல் 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்துவெறும் 9 ரன்கள் தான் எடுத்திருந்தனர். ஆனால், பிரையன் லாரா போன்றவர்கள் விடாமல் போராடினார்கள். லாரா அடித்த ரன்கள்ஒவ்வொன்றுமே மிக அருமையானவை.

அவ்வளவு சீக்கிரத்தில் மேற்கு இந்திய அணியை தோற்க விடமாட்டேன் என்று லாரா காட்டிய வெறி தான் வெற்றிக்குக் காரணமாகஅமைந்தது.

கிட்டத்தட்ட நேற்று விளையாடிய மேற்கு இந்திய அணி மாதிரி தான் திமுகவையும் நான் பார்க்கிறேன். தோல்வி என்பதுவெற்றிக்கான படிக்கல்லாகவே நானும் எங்களது இயக்கமும் கருதுகிறோம்.

நாங்கள் தோற்றிருக்கலாம், ஆனால் இனி வென்று காட்டுவோம் என்றார் கருணாநிதி.

மேலும் அவர் கூறுகையில்,

ஜெயலலிதா என்னைப் பற்றி பேசுவதை எட்டு கால செய்தியாக வெளியிடும் சில பத்திரிக்கைகள் நான் சொல்லும் பதில்களைபிரசுரிப்பதே இல்லை. தப்பித் தவறி வெளியிட்டால் அம்மையார் பாதக்குறடு எடுத்து அடிப்பாரோ என்ற பயம் காரணமாகஇருக்கலாம். பத்திரிகை தர்மம் வாழ்க.

கருணாநிதிக்கு இனி எதிர்காலம் இல்லை என்கிறார் ஜெயலலிதா. திடீரென என் ஜாதகத்தை ஆராய வேண்டிய அவசியம் அந்தஅம்மையாருக்கு ஏன் வந்தது என்று தெரியவில்லை.

திமுகவினரை குட்டிச் சாத்தான்கள் என்று அந்த அம்மையார் கூறியிருக்கிறார். எங்களை குண்டுச் சாத்தான் என்று கூறி தன்னைத்தானே கேலி செய்து முடியாது என்பதால் குட்டிச் சாத்தான்கள் என்று கூறியிருக்கிறார் போலும்.

அண்ணா சமாதிக்குப் போய் அவரை மரியாதை செய்ய மனம் இல்லாத ஜெயலலிதா காஞ்சிபுரத்தில் போய் அண்ணாவை புகழ்ந்துபேசியிருக்கிறார். அண்ணாவின் ஆரிய மாலை புத்தகத்தைப் படித்தால் இந்த புதிருக்கான விடை கிடைக்கும்.

சாத்தன்குளத்தில் தகிடுதித்ங்களை ஜெயலலிதா அரசு நடத்தி வருவதை தேர்தல் கமிஷன் கண்மூடி, வாய் பொத்தி பார்த்துக்கொண்டிருக்கிறது என்றார் கருணாநிதி.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+