சாத்தான்குளத்தில் குண்டர்களைக் குவிக்கும் அதிமுக
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் இடைத் தேர்தலில் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்ற வெளி மாவட்டங்களில் இருந்து குண்டர்களை அதிமுகவினர்அழைத்து வந்துள்ளதாக காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக தேர்தல் அதிகாரிவேலப்பனிடம் அவர் புகார் மனுவையும் தந்தார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ, கவர்னர் ராம்மோகன் ராவ், தூத்துக்குடி கலெக்டர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளஅந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
அதிமுக வேட்பாளர் நீலமேகவர்ணத்துக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் சாத்தான்குளத்திலேயே வந்து டேரா போட்டுள்ளனர்.இங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின்படி அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்பதைத் தெரிந்துகொண்டுவிட்டார்கள்.
இதையடுத்து முறைகேடாகவாவது வெற்றி பெற்றுவிடத் திட்டம் போட்டுள்ளனர். குண்டர்களின் துணையுடன் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றவும் கள்ள ஓட்டுக்கள் போடவும் திட்டமிட்டுள்ளனர்.
இதறகாக மதுரை, தேனி, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் இருந்து அதிமுக பிரமுகர்கள் நூற்றுக்கணக்கான குண்டர்களையும்ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் சாத்தான்குளத்தில் குவித்து வருகின்றனர். இவர்களுக்கான தங்கும் வசதி, உணவுஆகியவை இங்குள்ள அதிமுக பிரமுகர்களால் வழங்கப்படுகின்றர்.
தொகுதியில் இவர்கள் படு பந்தாவாக, தோரணையுடன், மிரட்டும் பாணியில் உலா வருகின்றனர். இவர்களைப் பார்த்தாலேபயந்துவிடும் நிலை உள்ளது. இதனால் தேர்தல் நாளில் அப்பாவி வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு வரவே மாட்டார்கள். எனக்குஆதரவு அதிகம் உள்ள 10 வாக்குச் சாவடிகளை ரகசிய போலீசார் கணக்கெடுத்து அதை அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த இடங்களில் தங்களது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட அதிமுக திட்டமிட்டுள்ளது. ஓட்டுக்கு ரூ. 1,000 வரைதருவதாகவும் அமைச்சர்கள் பேரம் பேசி வருகின்றனர். தமிழக போலீசார் அதிமுகவினருக்கு மட்டுமே பாதுகாப்பு தருகின்றனர்.
இதனால் தமிழக போலீசாரை விலக்கிக் கொண்டு மத்திய போலீசாரை இங்கு நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் நகல்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் லிங்டோ, கவர்னர் ராம்மோகன் ராவ்,தூத்துக்குடி கலெக்டர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
காங்கிரசுக்கு வி. சிறுத்தைகள் ஆதரவு
இந் நிலையில் சாத்தான்குளம் இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவு அளிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் அறிவித்துள்ளது.
இதன் பொதுச் செயலாளர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சாத்தான்குளம் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு அளிக்கிறோம். சாத்தான்குளத்தில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவாளர்களும்தலித்துகளும் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிப்பார்கள்.
மகேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் 21ம் தேதி முதல் 4 நாட்கள் நான் பிரச்சாரம் செய்வேன்.
விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் சாத்தான்குளத்தில் வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தார். அவர் தனது வேட்பு மனுவை இன்று வாபஸ் பெற்றுக் கொண்டார்.
சாத்தான்குளத்தில் திமுக போட்டியிட்டிருக்க வேண்டும். ஆனால் போட்டியிடாமலும், யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமலும் புறக்கணிப்பு செய்திருப்பது அதன்தடுமாற்றத்தையே காட்டுகிறது.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் பிற மதச் சார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைத்த ஜனநாயகப் பாதுகாப்பு அணிக்கு திமுக தலைமை தாங்க வேண்டும்என்றார் அவர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications