வீடியோ ஆதாரங்களைப் பார்க்க வைகோவுக்கு பொடா நீதிமன்றம் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட 9 பேரும்அவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை வரும் 28ம் தேதிஅவர்கள் பார்ப்பதற்கு பொடா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

வைகோ உள்ளிட்ட ஒன்பது பேர் மீதும் கடந்த ஜனவரி மாதம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அதன்நகல்களும் அவர்களிடம் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் இது தொடர்பான சில ஆவணங்கள் தேவை என்று வைகோ உள்ளிட்ட மதிமுகவினரின்வழக்கறிஞர்கள் இன்று பொடா நீதிமன்ற நீதிபதி எல். ராஜேந்திரனிடம் கேட்டுக் கொண்டனர்.

அதாவது போலீசார் கைப்பற்றியதாகக் கூறும் 23 பொருட்களில் 11 பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கஉத்தரவிடுமாறு நீதிபதியிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து குறிப்பிட்ட அந்த 11 பொருட்களையும் சமர்ப்பிக்குமாறு கியூ பிரிவு போலீசாருக்கு நோட்டீஸ்அனுப்ப நீதிபதி ராஜேந்திரன் அரசு தரப்பு வழக்கறிஞரான ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டார்.

மேலும் குற்றப்பத்திரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களைக் கேட்கவும்,பார்வையிடவும் அனுமதிக்க வேண்டும் என்றும் வைகோ உள்ளிட்ட மதிமுகவினரின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம்வேண்டுகோள் விடுத்தனர்.

அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவித்தார். ஆனால் அதை மறுத்த நீதிபதி வரும் 28ம் தேதிஇவ்வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை நடக்கும்போது அன்று பிற்பகலில் ஆடியோ மற்றும் வீடியோஆதாரங்களை வைகோ உள்ளிட்ட 9 மதிமுகவினரும் கேட்கவும் பார்க்கவும் அனுமதி அளித்தார்.

இந்த ஆதாரங்களை அவர்கள் பார்வையிடும் நிகழ்ச்சி அனைத்தும் ஒரு வீடியோ காமிரா மூலம்பதிவுசெய்யப்படும்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+