ஜெயலலிதாவை அவமதித்து பேசியதாக இளங்கோவன் மீது வழக்கு

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் மீது முதல்வர் ஜெயலலிதா மதுரை நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்துள்ளார்.

கடந்த 2002ம் ஆண்டு நவம்பர் மாதம் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பஞ்சாயத்து யூனியன் தேர்தல்நடந்தது. அதில் காங்கிரஸ் சார்பில் வக்கீல் சத்தியமூர்த்தி என்பவர் யூனியன் தலைவர் பதவிக்குநிறுத்தப்பட்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் சத்தியமூர்த்தியை ஆதரித்து இளங்கோவன் பிரசாரம் செய்தார். அப்போது இளங்கோவன்பிரசாரம் செய்த ஆறு இடங்களிலும் கலாட்டா நடந்தது. அதிமுக வேட்பாளர்தான் இந்தக் கலாட்டாவுக்குக் காரணம்என்று அப்போது காங்கிரசார் புகார் கூறினர்.

இதுகுறித்து பிரசாரத்தின்போது பேசிய இளங்கோவன், ஜெயலலிதா குறித்து விமர்சித்துப் பேசினார். இந்தப் பேச்சுமுதல்வரை அவமானப்படுத்துவதாக உள்ளது என ஜெயலலிதா சார்பில் மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில்அரசு வழக்கறிஞரான தமிழ்ச் செல்வன் அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி, வரும் மார்ச் 18ம் தேதிஇளங்கோவன் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+