பரிதிக்கு ஜாமீன் மறுப்பு: உயர் நீதிமன்றம் சென்றார்
சென்னை:
சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ. குமாரதாஸைத் தாக்க முயன்றதாகக் கைது செய்யப்பட்ட திமுக எம்.எல்.ஏ பரிதிஇளம்வழுதியின் ஜாமீன் வழங்க செசன்ஸ் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் பரிதி ஜாமீன்கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டசபையில் தமாகாகா எம்.எல்.ஏவான டாக்டர் குமாரதாஸைத் தாக்க முயற்சித்தது, அவரைக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியது ஆகியவை தொடர்பாக தமிழக அரசு அளித்த புகாரின் அடிப்படையில் பரிதியைகடந்த 31ம் தேதி நள்ளிரவில் போலீசார் கைது செய்தனர்.
சென்னை சிறையில் அடைக்கப்பட்டுள்ள பரிதி தன்னை ஜாமீனில் விடக் கோரி முதன்மை செஷன்ஸ்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே தான் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே தன்னை ஜாமீனில்விடுதலை செய்ய வேண்டும் என்றும் அம்மனுவில் பரிதி கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி வெங்கடேச பெருமாள் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பிலானகருத்துக்களைத் தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கோரினார்.
இதையடுத்து பரிதியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி வெங்கடேச பெருமாள் ஒத்திவைத்தார்.
இந்நிலையில் அந்த மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. மனுவை நீதிபதி ராமலிங்கம் விசாரித்தார்.
பரிதி சார்பில் ஆஜரான வழக்கறிஞரான சண்முகசுந்தரம், இவ்வழக்கில் பரிதி மீதான புகாருக்கு எந்தவிதமானஆதாரமும் இல்லை என்றும் வழக்கு தொடரும் அளவுக்கு அவர் மீதான புகார் உறுதியாக இல்லை என்றும் எனவேஅவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
பின்னர் அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி ராமலிங்கம், பரிதிக்கு ஜாமீன் வழங்க முடியாதுஎன்று கூறினார்.
நீதிபதி கூறுகையில், இந்த வழக்கில் குமாரதாஸைக் கொலை செய்வேன் என்று பரிதி மிரட்டியதாகக் கூறப்படும்குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. மேலும், இந்த வழக்கில் போலீஸ் விசாரணையே இப்போது தான்ஆரம்பித்துள்ளது. இதனால், உடனே ஜாமீன் வழங்க வேண்டிய அவசியமில்லை என்றார்.
இதையடுத்து பரிதி இளம்வழுதி ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் இன்றே மனு தாக்கல் செய்தார். இந்த மனுமீதான விசாரணை வரும் 31ம் தேதி நடக்கும் என்று தெரிகிறது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications