கிரிக்கெட் பெட்டிங்: சென்னையில் 2 பேர் கைது
சென்னை:
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இந்தியாவும், ஹாலந்தும் நேற்றுமோதிய போட்டி மிகுந்த பரபரப்பாக இருந்ததால் இந்தியா ஜெயிக்குமா தோற்குமா என்பது தொடர்பானசூதாட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் நடந்துள்ளது.
இது தொடர்பாக மும்பையில் ஒன்பது பேரும், டெல்லியில் ஒரு தம்பதியும் பிடிபட்டுள்ளனர். அவர்களிடமிருந்துகம்ப்யூட்டர், டி.வி., செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்நிலையில் இதே போன்ற ஒரு சூதாட்டம் சென்னையிலும் நடந்துள்ளது. இது தொடர்பாக இரண்டு பேர்பிடிபட்டுள்ளனர். வட மாநிலத்தவர்கள் அதிகம் குடியிருக்கும் செளகார் பேட்டை பகுதியில் கிரிக்கெட் பெட்டிங்நடப்பதாக பூக்கடை போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், பாரத் குமார் (வட்டிக்குப் பணம்கொடுப்பவர்), விஜயக்குமார் (சி.ஏ. மாணவர்) ஆகிய இரண்டு நபர்கள் பிடிபட்டனர்.
"எங்களைக் கைது செய்தால் பிரதமரிடம் புகார் செய்வோம். பத்திரிக்கைகளுக்கு எங்கள் போட்டோக்களைக்கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வோம்" என்றெல்லாம் மிரட்டியும் பயமுறுத்தியும் பார்த்தனர் அந்தஇருவரும்.
ஆனாலும் போலீஸார் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அவர்களைக் கைது செய்து அழைத்துச்சென்றனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில் பெட்டிங் நடத்துவதற்காக அலுவலகமே வைத்திருந்தது தெரிய வந்தது.
அந்த அலுவலகத்தில் இருந்த இரண்டு டி.விக்கள், 13 தொலைபேசிகள், கிரிக்கெட் போட்டிகள் குறித்த விவரங்கள்அடங்கிய கையேடு, பெட்டிங் தொகை குறித்த பட்டியல் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ராஜா என்ற நகைக் கடை அதிபர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். அவரைப்போலீஸார் தேடி வருகின்றனர்.
மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் இங்கு பணம் கட்டி பெட்டிங்கில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் கூறினர்.மேலும் உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியிலிருந்தே இங்கு பெட்டிங் நடந்து வந்ததாகவும் போலீஸார்தெரிவித்தனர்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications