சாத்தான்குளத்தில் காங்கிரஸ் முன்னிலை: கருத்துக் கணிப்பில் தகவல்
சென்னை:
சாத்தான்குளத்தில் காங்கிரஸ் கட்சி முன்னணியில் இருப்பதாக சென்னை லயோலா கல்லூரி நடத்திய கருத்துக் கணிப்பில்தெரியவந்துள்ளது.
இத் தொகுதியில் வரும் 26ம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. இங்கு காங்கிரஸ் வேச்பாளர் மகேந்திரன், அதிமுக வேட்பாளர்நீலமேகவர்ணம் இடையே தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
பிரச்சாரத்தில் அதிமுக தான் முன்னணியில் உள்ளது. இங்கு, காங்கிரஸ் நொண்டிப் பிரச்சாரம் தான் செய்து வருகிறது. இருந்தாலும்இத் தொகுதியில் அதிமுக அரசு மீது கடும் அதிருப்தி நிலவுவது கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.
மோசமான பிரச்சாரம் செய்தாலும் கூட திமுக, மதிமுக போட்டியில் இல்லாததால் காங்கிரசுக்கு ஆதரவு பெரும் ஆதரவு நிலவுவதாககருத்துக் கணிப்பு கூறுகிறது.
சென்னை லயோலா கல்லூரியின் விசுவல் கம்யூனிகேசன்ஸ் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் சாத்தான்குளத்தில்தங்கியிருந்து இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். இதில் அதிமுகவை விட காங்கிரஸ் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பதுதெரியவந்துள்ளது.
கருத்துக் கணிப்பில் தெரியவந்த விவரம்:
காங்கிரசுக்கு ஆதரவு - 56.4%
அதிமுகவுக்கு ஆதரவு- 39.4%
வித்தியாசம்- 127
சுயேச்சைகளுக்கு ஆதரவு- 0.6%
சுயேச்சைகளுக்கு மிகக் குறைவான ஆதரவே இருப்பதால் 23 பேர் போட்டியில் இருந்தாலும் ஓட்டுப் பிரியப் போவதில்லைஎன்றும் காங்கிரஸ், அதிமுகவுக்கு இடையில் தான் வாக்குகள் பிரியும் என்றும் கருத்துக் கணிப்பில் தெரியவந்தது.
விரும்பப்படும் தலைவர் கருணாநிதி:
அதே போல இத் தொகுதி மக்களால் மிகவும் விரும்பப்படும் அரசியல் தலைவர் யார் என்ற கேள்வியும் கருத்துக் கணிப்பில்கேட்கப்பட்டது. இதில் திமுக தலைவர் கருணாநிதிக்கே அதிக வாக்குகள் கிடைத்தன.
கருணாநிதிக்கு கிடைத்த ஆதரவு- 24%
ஜெயலலிதாவுக்கு கிடைத்த ஆதரவு- 17.4%
முதலிடத்தில் சன் டிவி:
அதே போல இத் தொகுதி மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் தமிழ்த் தொலைக்காட்சி குறித்தும் மாணவர்கள் கருத்துக்கேட்டனர். இதில் கிடைத்த விவரம்:
சன் டிவி- 56.5%
ஜெயா டிவி- 9.1%
ராஜ் டிவி- 3.9%
தூர்தர்ஷன்- 3.7%
ஸ்டார் விஜய் டிவி- 1.8%
(மாநிலத்திலேயே இரண்டாவது இடத்தில் இருப்பதாக விஜய் டிவி கூறிக் கொள்வது நினைவுகூறத்தக்கது)
இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தி காங்கிரஸ் முன்னணியில் இருப்பதாகச் சொன்ன லயோலா கல்லூரிக்கு விசுவல்கம்யூனிகேசன்ஸ் துறைக்கு அதிமுக தனது வழக்கமான ஸ்டைலில் ஆட்டோவில் ஆட்களை அனுப்பாமல் இருந்தால் சரி!
சாத்தான்குளத்தில் நிலைமை மோசம் என்று தான் தமிழக உளவுப் பிரிவும் அதிமுக தலைமையிடம் ரகசிய தகவல் தந்துள்ளது.இதனால் தான் எப்போதும் இல்லாதபடி இந்த சிறிய தொகுதிக்கு 5 நாட்களை ஒதுக்கியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. வரும் 17ம்தேதி முதல் அங்கு பிரச்சாரத்துக்குச் செல்லும் ஜெயலலிதா 122 குக்கிராமங்களுக்கும் சென்று வாக்கு கேட்க உள்ளார்.
ஜெயலலிதாவின் பிரச்சாரம் நிலைமையை அதிமுகவுக்கு சாதகமாக மாற்றுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications