காஸ் சிலிண்டர்களை திருடி விற்றவர் கைது
சென்னை:
காலியான காஸ் சிலிண்டர்களைத் திருடி, காஸ் நிரப்பி அவற்றை விற்று வந்த நபரைப் போலீஸார் கைது செய்தனர்.
சென்னை, கிண்டி பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. கிண்டி, அம்பத்தூர், அமைந்தகரை பகுதிகளில் உள்ள பல்வேறுதொழிற்சாலைகளில் கவனிப்பாரின்றி கிடக்கும் காஸ் சிலிண்டர்களைத் திருடுவது இவரது வழக்கம்.
திருடிய காஸ் சிலிண்டர்களில் பின்னர் காஸை நிரப்புவார். அதன் பிறகு அவற்றைக் குறைந்த விலைக்குவிற்றுவிடுவார் மூர்த்தி.
அடிக்கடி காஸ் சிலிண்டர்கள் காணாமல் போய் விடுவதாக அமைந்தகரை பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலைசார்பில் போலீஸாரிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸார் வெகு தீவிரமாகக் கண்காணித்து மூர்த்தியைக் கைது செய்தனர். தொழில் நிறுவனத்திற்குள்வரும் லாரிகளை வழிமறித்து, லாரி டிரைவர்களுக்குப் பணத்தைக் கொடுத்து சிலிண்டர்களைத் திருடியதுஅப்போது தெரிய வந்தது.
மேலும், காலி சிலிண்டர்கள் மீதுள்ள லேபிள்களை எடுத்து விட்டு அதன் பிறகு காஸ் நிரப்பி, பின்னர் போலியானலேபிள்களை ஒட்டி விற்பனை செய்து வந்துள்ளார் மூர்த்தி.
கைது செய்யப்பட்ட மூர்த்தியிடமிருந்து 24 காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications