கமுதியில் அதிமுக பிரமுகர் கண்டம் துண்டமாக வெட்டிக் கொலை
கமுதி:
கமுதி அருகே அதிமுக பிரமுகர் ஒருவர் கண்டம் துண்டமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கமுதியை அடுத்த செந்தனேந்தலைச் சேர்ந்தவர் முனியசாமி. அதிமுக பிரமுகரான அவருக்கும் அவருடையமனைவி ஆறுமுகவேலுவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.
இதையடுத்து முனியசாமியும் ஆறுமுகவேலுவும் விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். இது தொடர்பாக கமுதிநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஆறுமுகவேலுவை நடுரோட்டில் வைத்து முனியசாமி அடித்து உதைத்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஆறுமுகவேலுவின் அண்ணன் சக்திவேல் அதைக் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி தன்னிடமிருந்த கத்தியால் சக்திவேலின் கண்ணில் குத்தினார். இதனால்சக்திவேலுக்கு பார்வை பறிபோனது. இது தொடர்பாக முனியசாமியைப் போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் முனியசாமி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். பின்னர் ஜாமீனில் அவர் வெளியே வந்தார். நேற்றுகாலை அவர் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது சக்திவேலுவும் அவருடைய மூன்று சகோதரர்களும்முனியசாமியை வழிமறித்தனர்.
அதன் பிறகு முனியசாமியைச் சுற்றி வளைத்து அரிவாளால் தலையையும், கைகளையும், கால்களையும் துண்டுதுண்டாக வெட்டினர். பின்னர் பழிக்குப் பழி வாங்கும் விதமாக முனியசாமியின் கண்களிலும் அவர்கள் கத்தியால்குத்தினர்.
இதையடுத்து முனியசாமி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே பிணமானார்.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து சக்திவேல் உள்ளிட்ட நான்கு கொலையாளிகளையும் தேடிவருகின்றனர்.
-->
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications