"போடுங்கம்மா ஓட்டு!!
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தொகுதி இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று மாலை துவக்குகிறார்.
ஜெயலலிதாவின் பிரச்சாரத்தையொட்டி சாத்தான்குளம் களைகட்டியுள்ளது. இந்நகர சாலைகளில்எங்கு பார்த்தாலும் அதிமுக கொடிகளும், பேனர்களும், சுவரொட்டிகளும்தான் தென்படுகின்றன.
சுவர்களிலும் ஜெயலலிதாவை வரவேற்றும், அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணத்துக்குவாக்களிக்குமாறு கோரியும் வண்ணமயமான விளம்பரங்கள் மின்னிக் கொண்டிருக்கின்றன.
தெருக்களில் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளெல்லாம் அவசர அவசரமாக அகற்றப்பட்டுவருகின்றன. பிளீச்சிங் பவுடர்கள் தெளிக்கப்பட்டு, சுண்ணாம்பு பவுடர்களும்தெளிக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் சாத்தான்குளம் தற்போது படுசுத்தமாகக் காட்சியளிக்கிறது.
இந்நிலையில் இன்று மாலை சுமார் 4 மணிக்கு சாத்தான்குளம் தொகுதிக்கு உட்பட்ட அழகப்பபுரத்தில்தன் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார் ஜெயலலிதா.
இன்று முதல் 22ம் தேதி வரை சூறாவளிப் பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, 20ம் தேதி ஒருநாள்மட்டும் ஓய்வெடுத்துக் கொள்கிறார். 22ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்.
தேர்தல் கமிஷனிடம் காங். புகார்:
இதற்கிடையே சாத்தான்குளம் தொகுதியில் அதிமுகவினர் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தில்ஈடுபட்டுள்ளதாக தேர்தல் கமிஷனிடம் தமிழக காங்கிரஸ் புகார் செய்துள்ளது.
இது தொடர்பாக சென்னையில் தமிழக காங்கிரஸ் சட்டசபை தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறுகையில்,
சாத்தான்குளத்தில் அதிமுகவினர் தொடர்ந்து "இறக்குமதி" செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.அதிமுகவினர் கள்ள ஓட்டு போடுவதைத் தடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளை தேர்தல்கமிஷன் வகுக்க வேண்டும்.
சாத்தான்குளத்தில் இலவச சேலை, கிரிக்கெட் பேட், விளையாட்டு சாதனங்கள், கோவில்களுக்குநிதியுதவி ஆகியவற்றை அதிமுகவினர் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறு ஆளுங்கட்சியினர் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்றுகோரி தலைமை தேர்தல் அதிகாரியிடம் இன்று ஒரு மனு கொடுத்துள்ளோம்.
மேலும் கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ், தபால் சேமிப்பு சான்று ஆகியவற்றைக் காட்டிஓட்டுப் போட யாரையும் அனுமதிக்கக் கூடாது. 173 வாக்குச் சாவடிகளிலும் தலா இரண்டு வீடியோகாமிராக்களைப் பொருத்த வேண்டும்.
அரசுக்கு இ. கம்யூ. கோரிக்கை:
இதற்கிடையே சாத்தான்குளம் இடைத் தேர்தலை நியாயமாக நடத்துவதற்கான நம்பத் தகுந்தநடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகோரிக்கை விடுத்துள்ளது.
இக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடந்து. இந்தக் கூட்டத்தில் பல்வேறுதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அப்போது சாத்தான்குளத்தில் தேர்தல் நியாயமாகவும், ஜனநாயக முறைப்படியும் நடக்க மாநில அரசுஒத்துழைக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.


