ஜெகதீஷ்.. சீக்கிரம் ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க! விஜய்யின் நிழலாக இருக்கும் அந்த "மாஸ்டர் பிரைன்" யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் அரசியல் பயணத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை ஒரு பேராயுதமாக மாற்றியவர் அவரது மேலாளர் ஜெகதீஷ் பழனிசாமி.. சினிமா பிராண்டிங் தொடங்கி தவெகவின் தேர்தல் வியூகம் வரை அனைத்துக்கும் பின்னால் இருக்கும் இவரது மூளை, தற்போது தமிழக அரசியலையே அதிர வைத்துள்ளது.. கடந்த 10 ஆண்டுகளாக திரைமறைவில் இருந்து விஜய்யை ஒரு மாபெரும் பிம்பமாக செதுக்கிய ஜெகதீஷ் என்பவர் யார் தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

சினிமாவில் உச்சம் தொட்ட விஜய், இன்று தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் மூலம் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளார்.. இந்த அதிரடி மாற்றத்திற்கு பின்னால் திரைமறைவில் இருந்து மிக நுட்பமாக காய்களை நகர்த்தியவர் அவரது மேனேஜர் ஜெகதீஷ் பழனிசாமி என்பதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டியுள்ளது.

Vijay political strategist Jagdish Palanisamy TVK politics Jagdish Palanisamy update Vijay inner circle Tamil Nadu politics Vijay political growth TVK planning team

விஜய்யின் மூளை ஜெகதீஷ்

கடந்த 10 ஆண்டுகளாக சினிமாவில் விஜய்யின் பிராண்ட் மதிப்பை உயர்த்திய ஜெகதீஷ் மற்றும் அவரது 'தி ரூட்' நிறுவனம், இப்போது தவெகவின் டிஜிட்டல் ராஜ்ஜியத்தை உருவாக்கி மற்ற அரசியல் கட்சிகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது..

விஜய்யின் அரசியல் வருகைக்கான அஸ்திவாரம் சமீபத்தில் போடப்பட்டது கிடையாது.. இது பல ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்ட ஒரு மாபெரும் வியூகம்..

சோஷியல் மீடியா பதிவுகள்

எனவே அப்போதிருந்தே ஜெகதீஷின் 'தி ரூட்' நிறுவனம் வெறும் சினிமா மேலாண்மை நிறுவனமாக மட்டும் செயல்படாமல், ஒரு வலுவான தரவு பகுப்பாய்வு மையமாக இயங்கியது.. சோஷியல் மீடியாவில் விஜய்யின் ரசிகர்கள் எங்கே அதிகமாக இருக்கிறார்கள்? அவர்கள் எந்த மாதிரியான செய்திகளுக்கு எமோஷனல் ஆகிறார்கள்? என்றெல்லாம் ஷார்ப்பாக கண்காணித்து, அதற்கேற்ப கன்டென்ட்களை தயாரிப்பது இந்த நிறுவனத்தின் பணியாகும்.

இதற்காக ஆயிரக்கணக்கான டிஜிட்டல் வல்லுநர்கள் களமிறக்கப்பட்டு, குறிப்பாக இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் ஜென்ஸீ தலைமுறையை கவரும் வகையில் தனித்துவமான அல்காரித வியூகங்கள் வகுக்கப்பட்டன..

டிஜிட்டல் அலை உருவாயின

அதாவது ஒரு இளைஞர் இன்ஸ்டாகிராமில் விஜய்யின் ஒரு வீடியோவை பார்த்தால், அடுத்த சில நிமிடங்களில் அவரது பக்கம் முழுவதும் விஜய் தொடர்பான செய்திகளாகவே மாறும் வகையில் இந்த தொழில்நுட்பம் கையாளப்படுகிறது.. இதற்காக லட்சக்கணக்கான ஷேடோ ஐடிக்கள் உருவாக்கப்பட்டு, அவை விஜய்யின் அரசியல் கருத்துகளை தொடர்ந்து இணையத்தில் பதிவேற்றி ஒரு செயற்கையான 'டிஜிட்டல் அலை'யை உருவாக்கின..

இதன் மையப்புள்ளி வாட்ஸ்அப் குழுக்களில் தான் இருக்கிறது.. மற்ற கட்சிகள் தேர்தலின் போது மட்டும் வாட்ஸ்அப் குரூபகளை தேடும் நிலையில், ஜெகதீஷின் குழு கடந்த 5 வருடமாகவே தமிழகத்தின் ஒவ்வொரு ரசிகர் மன்றத்தையும் ஒருங்கிணைத்து வலுவான சங்கிலித் தொடர் அமைப்பை உருவாக்கியுள்ளது..

விஜய்யின் மாஸ் வசனங்கள்

இன்ஸ்டாகிராம் உலகில் இளைஞர்களின் லேங்குவேஜை மிக நுட்பமாக புரிந்து கொண்டவர் ஜெகதீஷ், விஜய்யின் மாஸ் வசனங்களை துண்டு துண்டாக வெட்டி, சினிமா எடிட்டிங் நுட்பங்களுடன் வெளியிட்டதே அவரது திறமைக்கு சான்று என்று சொல்லலாம். அதனால்தான், அரசியல் ஒவ்வாமை கொண்ட இளைஞர்களிடம் கூட ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது.. விஜய்யின் அரசியல் என்பது ஸ்டைலான விஷயமாகவும் கலர் மாற்றப்பட்டது..

அவ்வளவு ஏன்? விஜய்யை தாக்கி வரும் சோஷியல் மீடியாவில் பதிவுகளுக்குகூட நேரடியாகத் தர்க்கம் செய்யாமல், ஆயிரக்கணக்கான ஐடிக்கள் மூலம் டிஜிட்டல் தாக்குதல் நடத்தி விமர்சனங்களை அமுக்கிவிடும் உத்தியை ஜெகதீஷ் கையாண்டது அபாரம்.. விஜய்க்கு எதிரான பதிவுகள் எழும்போது, எதிர் தரப்பு ஹேஷ்டேக்குகளை டிரெண்ட் செய்து மக்களின் கவனத்தை திசைதிருப்பி பதிலடி கொடுத்ததையும் மறுக்க முடியாது.

ஜெகதீஷ், ஆம்புலன்ஸை கூப்பிடுங்க

கரூர் சம்பவத்தின்போது ஒவ்வொரு தொண்டர்களும் மயக்கமடைந்து விழுந்தனர். இதைப்பார்துது பதறிப்போன விஜய், ஜெகதீஷ், ஆம்புலன்ஸை கூப்பிடுங்க என்று சத்தம் போட்டார்., அப்போதுதான் ஜெகதீஷ் என்ற பெயர் பலருக்கும் பரிச்சயம் ஆனது..

கோவையைச் சேர்ந்த ஜெகதீஷ், ஆரம்பத்தில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷிடம் சோஷியல் மீடியா அட்மினாகத் தான் அறிமுகமானார்.. 'தலைவா' பட வேலைகளின் போது ஜிவி பிரகாஷ் மூலம் விஜய்யுடன் பழக்கம் ஏற்பட்டு, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் மேனேஜராகவும், தவெகவின் முக்கிய பொறுப்பாளராகவும் உயர்ந்துள்ளார்.

திரைக்குப் பின்னால் இருந்து விஜய்யின் ஒவ்வொரு நகர்வையும் செதுக்கும் ஜெகதீஷ் பழனிசாமி, தமிழக அரசியலில் டிஜிட்டல் மேலாண்மை எவ்வளவு முக்கியம் என்பதை மற்ற கட்சிகளுக்கு அழுத்தமாக இன்று உணர்த்தியிருக்கிறார்..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+