வெள்ளை அறிக்கை.. வெளிப்படையான ஆட்சி.. அதிரடி காட்டிய விஜய்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றது. விஜய் இன்று முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர். கோட், சூட்டுடன் மேடையேறிய விஜய் ஆண்டவன் மீது ஆணையாக என்று சொல்லி பதவியேற்றுள்ளார். பதவியேற்ற பிறகு பேசிய விஜய், தமிழக அரசின் சுமக்கவே முடியாத கடனில் தவிக்கிறது. தமிழ்நாடு அரசின் நிலைமையை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு, வெளிப்படைத்தன்மையுடன் ஆட்சி செய்வேன் என்று கூறியுள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்ற பிறகு பேசிய விஜய், மன்னர் பரம்பரையில் இருந்து வரவில்லை. சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான். என்னை உங்கள் மகனாக, அண்ணனாக, தம்பியாக ஏற்று கொண்டீர்கள். இந்தப் பயணத்தில் எவ்வளேவா கஷ்டங்கள், அவமானங்கள் இருந்தன. அதை பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் என் கூடவே நின்று என்னை முதலமைச்சராக்கியுள்ளீர்கள். வறுமை, பசி எல்லாம் தெரிந்தவன் நான். நான் தேவ தூதன் அல்ல. சராசரி மனிதன் நான்.

நான் செய்ய முடியாத வாக்குறுதிகளை சொல்லவில்லை. சாத்தியமான எல்லாவற்றையும் செய்வோம். எது வந்தாலும், எவ்வளவு வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற மனநிலையில் உள்ளேன். தமிழக அரசின் நிலை 10 லட்சம் கடன் கோடி கடனில் உள்ளது. இதற்கு முன்னதாக இருந்தவர்கள் கஜானாவை காலி செய்துள்ளனர். அங்கு எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.
கஜானா மோசமான நிலையில் உள்ளது. எல்லாவற்றையும் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கையாக வெளியிடுவேன். உங்களிடம் வெளிப்படையான ஆட்சியை கொடுப்பேன். தமிழக அரசின் தற்போதைய நிலையை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதில் இருந்து என் பணியை தொடங்குவேன். சொன்னவை அனைத்தையும் செய்வேன். எனக்கு அவகாசம் மட்டும் கொடுங்கள். இது உங்களின் ஆட்சி. சட்டம் ஒழுங்கு பெண்கள் பாதுகாப்பு, போதை தடுப்பு, கல்வி, போக்குவரத்து ஆகியவற்றில் கவனம் செலுத்துவேன்.
மக்களின் ஒரு பைசா கூட எடுக்க மாட்டேன். இந்த ஆட்சியில் யாரும் தவறு, ஊல் செய்ய முடியாது. ஜெயித்துவிட்டோம் என்று ஆடிவிடலாம் என யாராவது நினைத்தால் இப்போதே அதை அழித்துவிடலாம். இங்கு ஒரே ஒரு பவர் சென்டர் தான். அது இந்த விஜய் மட்டும் தான். இங்கு எந்த தவறும் நடக்காது. குழந்தைகளின் எதிர்காலத்தை மனதில் வைத்து இந்த விஜய் மாமா செயல்படுவேன். இது ஒரு புதிய தொடக்கம். அனைவரும் இணைந்து நல்லாட்சியை வழங்குவோம் வாருங்கள் என்றார்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
அஜித் தாயார் மறைவு! அரணாக இருந்து அரவணைத்த தாயை இழந்த நண்பருக்கு இரங்கல்! முதல்வர் விஜய் பதிவு -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
'பவர்’ தந்த மக்களுக்கு ’பவர்கட்’ பரிசு.. என்ன துறை என்றே தெரியாத அமைச்சர்கள்! விட்டு விளாசிய தமிழிசை












Click it and Unblock the Notifications