ஹாட் சீட்டில் அமர்ந்த விஜய்! முதல்வர் நாற்காலியை பார்த்ததும் பிரமித்த தருணம்!
சென்னை: தமிழக முதல்வராக பொறுப்பேற்ற விஜய், தலைமைச் செயலகத்திற்கு வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக பதவியேற்ற விஜய், நேரு ஸ்டேடியத்தில் இருந்து நேராக தலைமைச் செயலகத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு காவல் துறை மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் அறைக்குச் சென்ற விஜய், அங்கு முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.

முன்னதாக நாற்காலியில் அமருமாறு செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் விஜய் அந்த சீட்டை பார்த்ததும் வெட்கத்துடனும் ஆச்சரியத்துடனும் சிரித்தபடியே அமர்ந்தார்.
அவரை தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஐஏஎஸ் அதிகாரிகள், முதல்வர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தங்களை அறிமுகம் செய்து கொள்கிறார்கள். அது போல் ஐபிஎஸ் அதிகாரிகளும் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இன்று 12 - 1.30 மணிக்கு எமகண்டம் என்பதால் அதற்குள் முதல்வர் சீட்டில் விஜய் அமர்ந்துவிட்டார். விஜய் முதல்வரான நிலையில் தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது.
234 தொகுதியின் எம்எல்ஏக்களுக்கும் நாளை காலை 9.30 மணிக்கு தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து மே 12 ஆம் தேதி புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு பின்னர் புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கும்.
நேரு ஸ்டேடியத்தில் இருந்து தலைமைச் செயலகத்திற்கு வந்த விஜய், மூவர்ணக் கொடி பொருத்தப்பட்ட அரசு காரில், பயணம் செய்தார். முதல்வராக பதவியேற்று தலைமைச் செயலகம் சென்ற போதிலும் முதல்வர் நாற்காலியில் கோட் சூட்டில் அமர்ந்து கோப்புகளை பார்வையிட்டார்.
முன்னதாக முதல்வராக பதவியேற்றதும் விஜய் பேசுகையில், "எப்படி தொடங்குவது எனத் தெரியவில்லை. சினிமாவில் எப்படியாவது கஷ்டப்பட்டு வெற்றி அடைய வேண்டும் என இருந்த சாதாரண உதவி இயக்குநரின் மகன் நான். வறுமை என்றால் என்ன என்பது குறித்து எனக்கும் தெரியும்.
#WATCH | Chennai: Tamilaga Vettri Kazhagam (TVK) Chief C Joseph Vijay takes charge as the Chief Minister of Tamil Nadu, at the Tamil Nadu Secretariat. pic.twitter.com/dgL44WlzTg
— ANI (@ANI) May 10, 2026
மன்னர் பரம்பரையில் இருந்து வந்துவிடவில்லை. உங்கள் அண்ணன், உங்கள் தம்பி, உங்கள் மகன் மாதிரி தான் நானும். அப்படித்தான் நானும் உணர்கிறேன். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான் எனக்கு சினிமாவில் மிகப்பெரிய இடம் கொடுத்தீர்கள். நீ வா தம்பி நாங்க பாத்துக்குறோம் என நீங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்தீர்கள். இந்த பயணத்தில் எனக்கு ஏராளமான கஷ்டங்கள் இருந்தாலும், எனக்காக உடன் இருந்த உங்களுக்கும் அதே கஷ்டங்கள், அதே அவமானங்கள். அதை நீங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் என்னுடன் இருந்தீர்கள்.
தமிழ்நாட்டில் ரூ.10 லட்சம் கோடி மேல் கடன் உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துவிட்டு சென்றுள்ளார்கள். அப்படியான ஒரு நிலையில் தான் இந்த பொறுப்பை நான் கையில் எடுத்திருக்கிறேன். இவ்வாறு விஜய் பேசியுள்ளார்.
-
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
ஏனுங்க, கொஞ்சம் கேளுங்க.. கோயம்புத்தூர்-க்கு விஜய் விசிட்.. கூடவே ஒரு சர்ப்ரைஸ்..சொன்னது யார் தெரியுமா? -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்











Click it and Unblock the Notifications