ஆலங்குளம் அரிவாள் வெட்டு சம்பவம்.. டிரோன் உதவியுடன் சிறார்கள் உள்பட 8 பேர் கைது!

Subscribe to Oneindia Tamil

தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக டிரோன் உதவியும் 3 சிறார்கள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், நெல்லை மற்றும் தென்காசி எஸ்பிக்கள் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில், திருமண வீட்டில் பிளக்ஸ் வைப்பதில் இரு பிரிவினர் இடையே மோதல் என தெரியவந்துள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோயில் தெருவில் உள்ள வாலிபர் ஒருவருக்கு நேற்று முன் தினம் திருமணம் நடைபெற இருந்தது. அப்போது பிளக்ஸ் போர்டு வைப்பது தொடர்பாக மணமகன் வீட்டை சேர்ந்த நபர்களுக்கும் மதுபோதையில் அங்கு வந்த நபர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Alangulam Aruval Attack Case Five Special Teams Formed for Probe

சிறார்கள் உள்பட 8 பேர் கைது

இதனையடுத்து பைக்கில் வந்த இளைஞர்கள் சிலர், கண்மூடித்தனமாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 3 சிறார்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். 5 தனிப்படைகளை போலீசார் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 3 பைக்குகளில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் இந்த கொலை வெறி செயலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது . சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

போலீசார் தீவிர விசாரணை

5 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். கஞ்சா போதையில் இந்த சம்பவம் நடைபெற்று இருப்பதாகவும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இன்னொரு பக்கம் கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கடந்த மார்ச் மாதம் நாங்குநேரி அருகே பெரும்பத்து பகுதியில் இதேபோன்று டீக்கடையில் நின்றிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட கொடூர சம்பவத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தின் ரணம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், அதேபோன்றதொரு தாக்குதல் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் எற்படுத்தியுள்ளது.

நடந்தது என்ன?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூர் மாதா கோயில் தெருவில் உள்ள வாலிபர் ஒருவருக்கு நேற்று முன் தினம் திருமணம் நடைபெற இருந்தது. இரவு 11 மணியளவில் மணமகனின் உறவினர்கள் சிலர் பேனர் வைத்துக் கொண்டு இருந்தனர். அப்போது, அங்கு மதுபோதையில் வந்த இளைஞர் ஒருவர் பேனர் வைத்தவர்களிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால், அந்த இளைஞருக்கும் திருமண வீட்டினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஊர் பெரியவர்கள் சேர்ந்து சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர். திருமணம் நேற்று முடிந்த நிலையில், மாலையில் மணமகன் வீட்டினர் மேளதாளத்துடன் வீட்டின் அருகே நின்றுள்ளனர். அப்போது அங்கு பைக்கில் வந்த 9 பேர் கொண்ட கும்பல், அரிவாளால் கண்மூடித்தனமாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது.

இந்த கொலை வெறி தாக்குதலில் நெட்டூரை சேர்ந்த ரமேஷ் (வயது 49), அருள் மாறன் (23), சந்தோஷ்குமார், ராயப்பன், ராம்குமார் ஆகியோரும் மேளம் அடிக்க வந்த மாடசாமி (19) என்பவரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.

நெல்லை மானூரை சேர்ந்தவர் மீதும் தாக்குதல்

இதற்கிடையே, நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த தெற்குபட்டி கிராமத்தில் நேற்று மாலையில் 3 பைக்குகளில் ஒரு கும்பல் அரிவாளுடன் அதிவேகமாக சென்றுள்ளது.. இதனை அவ்வழியாக வந்த ஒருவர் கவனித்து இவ்வளவு வேகமாக ஏன் போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல், தெற்குபட்டியை சேர்ந்த அப்துல் ரகுமான், முபாரக் ஆகிய இருவரையும் தாக்கிவிட்டு தப்பியுள்ளனர்.

இதில் காயம் அடைந்த இருவரும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆலங்குளத்தில் தாக்குதல் நடத்திய அதே கும்பல்தான் தெற்குப்பட்டியிலும் தாக்குதல் நடத்தியதா? என விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+