ரவிக்குமார் என்ன இப்படி சொல்லிட்டாரே? அமித்ஷா விசிகவை குறி வைக்கிறாரா? டெல்லிக்கு பறந்த தகவல்
சென்னை: தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் பரபரப்பான திருப்பங்கள், கூட்டணி கணக்குகளை தலைகீழாக மாற்றி அமைத்திருக்கின்றன. தேர்தல் பிரச்சாரங்களின் போது விசிக மற்றும் பாஜக இடையே நிலவி வந்த காரசாரமான அரசியல் மோதல்களுக்கு மத்தியில், தற்போது டெல்லியில் இருந்து வந்துள்ள ஒரு வாழ்த்துச் செய்தி ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் உற்று நோக்க வைத்திருக்கிறது.. அது என்ன தெரியுமா?
கடந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், திமுக கூட்டணியின் வெற்றியைப் பாதிக்கும் வகையில் பாஜக காய்களை நகர்த்தி வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

திருமாவளவன் பேச்சு
"இஸ்லாமியர்கள் கிறிஸ்துவர்கள் வாக்குகளை சிதறடித்தால் திமுகவின் வெற்றி பாதிக்கப்படும் எனவே, விஜயை தனியாக நிற்க பாஜக சொல்லியிருக்கிறது. பெரும்பான்மை இல்லாமல் தொங்கு சட்டசபை அமைந்தால், உங்களை முதல்வராக்குகிறோன் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறதாக கூறப்படுகிறது. இவ்வாறு எந்த ஆட்டத்தையும் ஆடுவதற்கு பாஜக தயாராகியிருக்கிறது. எனவே, வாக்குகள் சிதறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று பிரச்சாரங்களில் முழங்கியிருந்தார்.
ஆனால், இப்போது அரசியல் சூழல் அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. விஜய்யின் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ள நிகழ்வு, தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.
ஆர்எஸ்எஸ்ஸின் செல்லப்பிள்ளை
இந்த அதிரடி மாற்றத்தை முன்வைத்து பாஜக தரப்பு விசிகவை மிகக் காரசாரமாக விமர்சிக்கவும் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் "கடந்த காலங்களில் முதலமைச்சர் விஜயை ஆர்எஸ்எஸின் செல்லப்பிள்ளை என விசிக தலைவர் திருமாவளவன் கூறினார். ஆனால் தற்போது விஜயின் அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ளதால், திருமாவளவனை ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளையாக தான் அனைவரும் பார்க்கிறார்கள்" காரசாரமாக விமர்சித்திருந்தார்.
இப்படி ஒருபுறம் பாஜகவினர் விசிகவை நோக்கி விமர்சனக் கணைகளைத் தொடுத்து வரும் நிலையில்தான், மறுபுறம் பாஜக மேலிடத்திலிருந்து விசிக எம்பி ரவிக்குமாருக்கு எதிர்பாராத வாழ்த்து ஒன்று வந்து சேர்ந்துள்ளது.
விசிக ரவிக்குமாருக்கு வாழ்த்து
விசிக எம்பி ரவிக்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரடியாகத் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த வாழ்த்து பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ள நிலையில், இது தொடர்பாக ரவிக்குமார் எம்பி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அமித் ஷாவின் வாழ்த்து குறித்து விசிக எம்பி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சான்றிதழ்களின்படி நேற்று என் பிறந்த நாள். காலை உள்துறை அமைச்சகத்தில் இருந்து, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. 'உங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து சொல்வார்' என்றனர்.
சற்று நேரத்தில், மொபைல் எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. நான் தான் என, உறுதிப்படுத்திக் கொண்டு, அமைச்சர் அமித் ஷாவிடம் கொடுத்தனர். அவர் எனக்கு வாழ்த்து கூறினார். எதிர்பாராத அழைப்புக்கும், வாழ்த்துக்கும் நன்றி தெரிவித்தேன்.
அமித்ஷா தந்த இன்ப அதிர்ச்சி
கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத வழக்கம் இது. ஒரு எம்.பி.,யை மதித்து, பிறந்த நாள் வாழ்த்து கூறுவது வரவேற்கக்கூடியது. இதுவரை ஜனாதிபதி, பிரதமர் அலுவலகங்களில் இருந்து, அவர்கள் கையொப்பமிட்ட வாழ்த்து கடிதம் மட்டுமே வரும். இம்முறை ஒடிஷா கவர்னரிடம் இருந்தும், வாழ்த்து கடிதம் வந்துள்ளது. கட்சி சார்பற்ற, நல்லெண்ண அடிப்படையிலான வழக்கத்தை, தமிழக கவர்னரும், முதல்வரும் கடைப்பிடித்தால் சிறப்பாக இருக்கும்" இவ்வாறு விசிக எம்பி ரவிக்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத புதிய நடைமுறையாக ஒரு எம்பியை மதித்து மத்திய உள்துறை அமைச்சர் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்துள்ளதை அவர் வரவேற்றுள்ளதோடு, கட்சி சார்பற்ற இத்தகைய நல்லெண்ண வழக்கத்தைத் தமிழக ஆளுநரும், முதலமைச்சரும் கூட பின்பற்ற வேண்டும் என்று தனது அறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications