'இந்த ஜெகதீஷ் தான்'.. உதயநிதி ஸ்டாலின் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.. பாருங்க புரியும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், தமிழ் திரையுலகில் உச்சபட்ச நடிகர்களில் ஒருவர் ஆவார். குழந்தைகள், பெண்கள் , இளைஞர்களை அதிக அளவில் ரசிகர்களாக கொண்டவராக இருந்தார். இன்று தமிழக அரசியலில் களம் கண்டு, முதல்வராகி உள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து , வெறும் இரண்டு வருடத்தில், அதுவும் முதல் தேர்தலிலேயே அபாரமாக வென்று முதல்வராகி உள்ளார். இதற்கு பின்னால் திரைமறைவில் இருந்து மூளையாக செயல்பட்டவர்களில் முக்கியமானவர் ஜெகதீஷ் பழனிசாமி. இவர் ஒரு காலத்தில் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து அவரது புகைப்படத்தை வழங்கி, அவரை சந்திக்க ஏங்கியவர். இன்று உதயநிதியின் முதல்வர் கனவுக்கே வேட்டு வைத்துள்ளார்.

சினிமாவும் தமிழ்நாடும் ஒன்றோரு ஒன்று கலந்தது. சினிமாவில் ஹீரோவாக இருப்பவர்கள், நம்மை காப்பார்கள் என்ற பிம்பம் எம்ஜிஆர் காலம் தொடங்கி, ரஜினிகாந்த், விஜய் படிப்படியாக வந்த வண்ணம் இருக்கிறது. சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர்கள் தங்கள் இமேஜை பாதுகாக்க பல்வேறு விஷயங்களை செய்வது வழக்கம். அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளாக விஜய்யின் பிராண்ட் மதிப்பை உயர்த்தும் வேலையில் இருந்தவர் தான் ஜெகதீஷ் பழனிச்சாமி. இவரது 'தி ரூட்' நிறுவனம் தான் இந்திய அரசியலில் யாருமே செய்யாத புதிய அரசியலை நிகழ்த்தி காட்டியது.

Netizens React to an Old Photo of Jagadeesh Palanisamy and Udhayanidhi Stalin Together

எம்ஜிஆருக்கு நிகரான ஒரு பிம்பத்தை விஜய்யை கொண்டு சேர்த்து, எம்ஜிஆர் பாணியில் விஜய் முதல்வராகும் வகையில் மாற்றியதில் ஜெகதீஷ் பழனிசாமியின் பங்கு அளப்பரியது. ஜெகதீஷும், அவருடைய சோஷியல் மீடியாவும் மிகப்பெரிய வேலைகளை இன்ஸ்டாவிலும், சமூக ஊடகங்களில் செய்த வேலை தான், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி பறிபோக காரணமாக இருந்தது.

2012ம் ஆண்டு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எந்த அரசியலிலும் இல்லாமல் நடிகராக இருந்த காலத்தில் அவரை சந்திக்க ஏங்கி, புகைப்படத்துடன் சென்று அறிமுகம் ஆனவர் தான் ஜெகதீஷ். கையால் வரையப்பட்ட உதயநிதியின் ஓவியத்தை உதயநிதிக்கு பரிசளித்தார். அந்த புகைப்படம் இன்று வைரலாகிறது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், தன்னை சந்தித்த இந்த நபர் தான் எதிர்காலத்தில் தனது அரசியலுக்கு வேட்டுவைப்பார் என்றும், முதல்வர் கனவை காலி செய்ய போகிறார் என்றும் உதயநிதி கனவிலும் நினைத்திருக்க மாட்டார் என்று கூறுகிறார்கள்.

ஜெகதீஷ் என்ன வேலை செய்தார்: தமிழக வெற்றிக்கழகத்தை விஜய் ஆரம்பித்த உடனேயே, சமூக வலைதளங்களில் விஜய்யின் ரசிகர்கள் எங்கே இருக்கிறார்கள், அவர்கள் எந்த மாதிரியான செய்திகளைப் பகிர்கிறார்கள், எதற்கெல்லாம் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்பதை ரூட் நிறுவனம் மிகவும் கவனமாகவும் துல்லியாகவும் ஆராய்ந்து டேட்டா சேகரித்தது,.

இதற்காக ஆயிரக்கணக்கான டிஜிட்டல் வல்லுநர்கள் மாத சம்பளத்திற்கு பணியமர்த்தப்பட்டனர். இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் ஜென்ஸீ தலைமுறை இளைஞர்களைக் கவர ஒரு தனித்துவமான அல்காரித வியூகம் வகுக்கப்பட்டது. இதுதான் இளைஞர்களை கவர்ந்து விஜய் வெற்றி பெற காரணமாக அமைந்தது. 80 சதவீதத்திற்கும் மேல் இளைஞர்கள் விஜய்க்குத்தான் வாக்களித்துள்ளார்கள். தன் குடும்பத்தையும் ஓட்டுப்போட வைத்துள்ளனர். இதுதான் பாரம்பரிய கட்சிகள் காலியாக காரணமாக அமைந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+