விஜய் முதல் நாளே சம்பவம் ஒரே கல்லில் 3 மாங்காய்! பெண்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் 3 தரப்புக்கு 3 திட்டங்கள்
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், முதலமைச்சராகப் பொறுப்பேற்ற உடனேயே தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் மூன்று முக்கிய திட்டங்களுக்கு ஒரே நேரத்தில் கையெழுத்திட்டார்.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் மேடையிலேயே இந்த மூன்று திட்டங்களும் அறிவிக்கப்பட்டன. இது ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தது போன்று பெண்கள், இளைஞர்கள், குடும்பஸ்தர்கள் ஒரே நேரத்தில் கவரும் வகையில் 3 தரப்புக்கும் சேர்த்து 3 திட்டங்கள் அறிவித்தார்.

பதவியேற்பு விழாவில் முதல் மூன்று அரசாணைகள்
பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணம் செய்துகொண்ட விஜய், உடனடியாக மூன்று முக்கியக் திட்ட அறிக்கையில் கையெழுத்திட்டார்.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் குடும்பஸ்தர்கள் ஆகிய மூன்று முக்கிய தரப்பினரின் நலனை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள், புதிய அரசின் முதல் மூன்று அரசாணைகளாக அமைந்துள்ளன.
குடும்பஸ்தர்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம்
முதல் திட்டமாக, ஒவ்வொரு வீட்டுக்கும் மாதம் 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் திட்டத்துக்கு விஜய் கையெழுத்திட்டார் முதல்வர் விஜய். இரு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்குள் மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாகக் கிடைக்கும். இது தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. குடும்பஸ்தர்களின் மாதாந்திர மின்சாரக் கட்டணச் சுமையை கணிசமாகக் குறைக்கும் இந்தத் திட்டம், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களின் பாதுகாப்புக்கு 'சிங்கப்பெண்' அதிரடிப்படை
இரண்டாவது திட்டமாக, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கவும் 'சிங்கப்பெண்' என்ற பெயரில் ஒரு தனிப்பட்ட அதிரடிப்படையை உருவாக்க விஜய் உத்தரவிட்டார். இந்தப் படை பெண்களுக்கு எதிரான வன்முறைகளை விரைவாகக் கையாளும் வகையில் அமைக்கப்படும். பெண்கள் அச்சமின்றி வாழவும், நடமாடவும் உதவும் இந்தத் திட்டம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகும்.
போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு
மூன்றாவது திட்டமாக, தமிழ்நாட்டை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் 'ஆன்டி நார்கோடிக்ஸ் ஃபோர்ஸ்' (போதைப்பொருள் தடுப்புப் படை) ஒன்றை உருவாக்க விஜய் உத்தரவிட்டார். இந்தப் படை மாநிலம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் செயல்படும்.
குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பது, இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை இந்தப் படை முன்னெடுக்கும். இது இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் முக்கிய திட்டமாகும்.
விஜய் பதவியேற்பு விழாவில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
விஜய் அரசில் புதிய சகாப்தம்.. ஒரு ரூபாய் லஞ்சம் இன்றி 171 வணிகவரி அதிகாரிகளுக்கு பதவி உயர்வு! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
உங்க வயசு என் அனுபவம்.. சீனியருக்கு மரியாதையில்லை! ஆனந்த் - ஆதவ் - அருணுக்கு அடுத்து செங்கோட்டையன்! -
ராஜ்ய சபா தேர்தல்.. காய் நகர்த்தும் காங்கிரஸ்.. கிரிஷ் சோடங்கர் சொன்ன முக்கிய பாய்ண்ட்! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications