தொகுதி மறுவரையறை என்றால் என்ன.. பாஜகவிற்கு ஆதரவாக திமுக முடிவு? தலையெழுத்தையே மாற்றுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவுடன் கூடடணியில் இருந்த காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், முஸ்லீம் லீக், மதிமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்குமே இன்று தொகுதி மறுவரையறை மசோதா விவகாரத்தில் திமுக என்ன முடிவெடுக்க போகிறது என்கிற பயம் தான் தெரிகிறது. திமுக தான் பாஜகவின் அந்த மசோதா தோற்க காரணமாக இருந்தது. இப்படியான சூழலில் மக்களவையில் 22 எம்பிக்களையும், மாநிலங்களவையில் 10 எம்பிக்களையும் வைத்துள்ள திமுக ஆதரவு தந்தால், பாஜக விரும்பிய தொகுதி மறுவரையறை நிறைவேறுவதற்கு மிக அதிக வாய்ப்பு உள்ளது. இதுதான் அந்த பயத்திற்கு காரணம். பாஜகவின் பக்கம் திமுக சென்றுவிடுமோ என்று அச்சத்தில் இருக்கிறது காங்கிரஸ். உண்மையில் தொகுதி மறுவரையறை என்பது இந்தியாவே அறிய வேண்டிய மிகப்பெரிய விஷயம் ஆகும்.இது பற்றி விரிவாகவே பார்ப்போம்.


தொகுதி மறுவரையறை என்பது என்ன

தொகுதி மறுவரையறை என்பது ஆங்கிலத்தில் டிலிமிட்டேஷன் ( Delimitation) என்று அழைக்கப்படுகிறது. நாட்டில் அதிகரிக்கும் மக்கள் தொகை மாற்றங்களுக்கு ஏற்ப, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும், எண்ணிக்கையையும் மாற்றி அமைக்கும் செயல்முறை தான் தொகுதி மறுவரையறை. இந்த டிமிலிட்டேஷன் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தால் அமைக்கப்படும் டிமிலிட்டேஷன் கமிஷனால் மேற்கொள்ளப்படுகிறது.

Delimitation Explainer What would happen to Tamil Nadu if the DMK decided to support the BJP

2026 வரை தடை

இந்தியாவில் 1970களில் மாறிய பின்னர் இன்று வரை மாறவில்லை.. இந்தியாவில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டது. 2008-இல் தொகுதிகள் மாற்றியமைக்கப்பட்டன. ஆனால் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு அரசியல் ரீதியான பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற குரல் எழும்பியது. இதனால் 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையிலேயே தொகுதிகளின் எண்ணிக்கை 2026 வரை முடக்கி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த காலக்கெடு முடிவுக்கு வந்துள்ளது. இதனால் மக்கள் தொகையின் அடிப்படையில் புதிய தொகுதிகளை வரையறுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட தொடங்கியது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கு தண்டனை

இன்றைய சூழலில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் மறுவரையறை செய்ய மத்திய அரசு முடிவு செய்தால், குடும்பக் கட்டுப்பாடு உள்ளிட்ட மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திய தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களின் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை கடுமையாக குறையும். அதேநேரம், மக்கள் தொகையை கட்டுப்படுத்த தவறிய, அதாவது அதிக மக்கள் தொகை உள்ள வட மாநிலங்களின் இடங்கள் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும்.

திமுக எதிர்ப்பு

இதனால் இந்த தொகுதி மறுவரையறை நடைமுறை தென்னிந்தியாவின் அரசியல் உரிமையைப் பறிக்கும் செயல் ஆரம்பம் முதலே தமிழக கட்சிகள் ஒட்டுமொத்தமாக எதிர்த்து வருகின்றன. மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என்று திமுக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. கடந்த முறை தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்த போது, திமுகவின் எதிர்ப்பு மற்றும் அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாடி எதிர்ப்பு, மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எதிர்ப்பு காரணமாகவே தோற்றுப்போனது.

திமுக ஆதரிக்கலாம்

இந்தமுறை திமுக இந்த மசோதாவை ஆதரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள் திமுக ஆதரவாளர்கள். இதுபற்றி திமுக ஆதரவாளர் ஒருவர் கூறுகையில், "திமுக முதலில் இருந்து தமிழ்நாட்டுக்கு நாடாளுமன்றத்தில் இப்போது உள்ள பிரதிநிதித்துவம் 7.2% என்பது மக்கள்தொகை அடிப்படையில் குறைக்க கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறது. 850 தொகுதிகள் எனில் தமிழ்நாட்டுக்கு 61 தொகுதிகள் உறுதி செய்யும் பட்சத்தில் ஆதரிப்பதில் என்ன தவறு

திமுக எதிர்க்க காரணம் என்ன

மக்கள் தொகை அடிப்படையில் எனில் இப்போது இருக்கும் 39 தொகுதி என்பது 31 ஆக குறையும். 850 எனில் 49 தொகுதியாக (12 தொகுதி குறையும்) மாறும். இதை தான் திமுக மசோதா நிலையிலேயே எதிர்க்கிறது. காரணம்... சட்டமான பின் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது " என்று கூறியிருந்தார். இவரது கருத்தை பல திமுகவினர் வரவேற்று இருந்தனர்.

காங்கிரஸ் துரோகத்தால் கோபம்

காங்கிரஸ் செய்த துரோகத்தால் கொதித்து போயிருக்கும் திமுகவினர், இந்த மசோதாவை ஆதரிக்க குரல் கொடுக்கிறார்கள். இவர்களின் குரலுக்கு மதிப்பளித்த திமுக செய்திதொடர்பாளர் ஆர்எஸ் பாரதி, மசோதாவில் திமுகவின் பரிந்துரைகள் சேர்க்கப்பட்டால், அதை எதிர்க்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என்று கூறியிருந்தார். இது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி சென்ற காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் உச்சகட்டமான விஷயம் என்னவென்றால், இந்த தொகுதி மறுவரைறை மசோதாவை முதல்வர் விஜய் எதிர்த்துள்ளார். அதனை வெளிப்படையாகவே கரூரில் பேசினார்.

திமுகவின் முடிவு

இந்த சூழலில் தான் திமுக எடுக்க போகும் முடிவு முக்கியமானது. திமுக தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரித்து வாக்களித்தால், அது பாஜக சார்பு நிலையாகிவிடும் என்று எதிர்க்கட்சிகள் அஞ்சுகின்றன. அதேநேரம் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தாலும், பாஜகவிற்கு சாதகமாகவிடும். ஏனெனில் மேற்கு வங்கத்தில மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மொத்தமாக உடைந்துவிட்டது. மம்தா ஆதரவு எம்பிக்கள் எண்ணிக்கை மிக குறைவு. அதிருப்தி திரிணாமுல் எம்பிக்கள், பாஜக ஆதரவு நிலைப்பாட்டினை எடுக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. அதேபோல் ஆம்ஆத்மியிலும் ஏழு எம்பிக்கள் மொத்தமாக பாஜகவிற்கு தாவிவிட்டனர். இதுதவிர உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவில் இருந்தும் கணிசமான எம்பிக்கள் ஷிண்டேவின் அணிக்கு தாவிவிட்டனர். எனவே தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற வாய்ப்பு அதிகம். எனினும் நம்பர் படி பார்த்தால், சமாஜ்வாதியின் அகிலேஷ் எடுக்கும் முடிவும் ஓரளவு முக்கியம்.

அமித்ஷா விளக்கம்

இந்த மசோதா குறித்து அமித்ஷா கூறுகையில், விகிதாச்சாரங்களின் அடிப்படையிலேயே தொகுதிகள் அதிகரிக்கும் என்றார். தமிழ்நாட்டிலிருந்து 39 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படும் நிலையில், 543 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் அதன் பிரதிநிதித்துவம் 7.18% (விகிதாச்சாரம்) ஆகும். இடங்கள் அதிகரிக்கப்பட்ட பிறகு, எம்.பி.க்களின் எண்ணிக்கை 59 முதல் 61 ஆக ஆக உயரும். தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் 7.23% ஆக இருக்கும் என்பது மத்திய அரசின் நிலைப்பாடாக உள்ளது. இந்த மசோதாவை ஆதரிக்க திமுக முடிவெக்க வாய்ப்பு அதிகம் என்றே சொல்லப்படுகிறது. எனினும் தெளிவான வரைவு மசோதா தாக்கல் செய்யப்பட்ட பின்னரே இறுதி நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்பதுதிமுகவின் கருத்தாக உள்ளது. எனவே இந்த மசோதா குறித்து ஸ்டாலின் எடுக்கும் முடிவினை காங்கிரஸ் உள்பட எல்லா எதிர்க்கட்சிகளும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+