நடிகர் சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? உடல் மெலிந்து ஆளே மாறிய போட்டோ.. அவரே கொடுத்த பதில் என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல இளைஞர்கள் சக நண்பர்களிடம் பேசும்போது கூட, "இவன் பெரிய சல்மான்கான்" என்று கிண்டலாக பேசியிருப்பார்கள். காரணம் சல்மான்கான் பார்ப்பதற்கு கம்பீரமாக, ஆண் அழகனாக பிரபலமானவர். அதனாலேயே அப்படி சொல்வார்கள். ஆனால் அவர் சமீபத்தில் உடல் மெலிந்து வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவியது.

அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும் சல்மான் கானுக்கு என்ன ஆச்சு? உடல்நிலை எதுவும் சரியில்லையா? முன்பு இருந்த எனர்ஜி இப்போது இல்லையே? என்று கேள்வி எழுப்பி இருந்தனர். இந்த நிலையில் இதற்கு பதில் சொல்லும் வகையில் சல்மான் கான் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

சல்மான் கான் போஸ்ட்

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோ ஒன்றை போஸ்ட் போட்ட சல்மான்கான் "உங்கள் அனைவரின் உடல்நிலை எப்படி இருக்கிறது? என்று கிண்டலாக கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். இந்த பதிவு ரசிகர்களிடம் வேதமாக பரவி வருகிறது. எங்களை பற்றி கேட்கும் அளவுக்கு உங்களுக்கு ஒன்றும் இல்லை போல..., பழைய சல்மான் திரும்பி வந்துவிட்டார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Salman Khan Bollywood Salman Khan Health Instagram

சல்மான் கான் லேட்டஸ்ட் போட்டோ

சமீபத்தில் விமான நிலையத்தில் சல்மான் கானை பார்த்ததும் ரசிகர்கள் அதிர்ந்து போய்விட்டனர். அப்போதுதான் அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் மெலிந்து இருந்ததாகவும், முகமும் வாடிபோய் டயர்ட் ஆக இருந்ததாகவும் ரசிகர்கள் கவனித்திருக்கிறார்கள். இதை வைத்து தான் இவருக்கு என்ன ஆச்சோ என்று சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு இப்போது எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்று சொல்லாமல் சொல்வது போல சல்மான் கான் போஸ்ட் போட்டு இருக்கிறார்.

இந்தி சினிமாவில் கடந்த மூன்று சகாப்தங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக இருந்து வரும் சல்மான்கான் 1989இல் வெளியான படத்தின் மூலம் மிகப்பெரிய நட்சத்திரமாக மின்ன தொடங்கி விட்டார். அதற்கு பிறகு பல சூப்பர் டூப்பர் திரைப்படங்களில் நடித்திருந்தார். அவருடைய படங்கள் வெளியாகும் நாளே ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போல மாறும் அளவுக்கு இந்தியா முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் அவருக்கு உருவாகிவிட்டனர்.

Salman Khan Bollywood Salman Khan Health Instagram

சல்மான் கான் பற்றிய சர்ச்சை

சல்மான்கான் சினிமா வாழ்க்கை எவ்வளவு வெற்றிகரமாக இருந்ததோ அதே அளவுக்கு அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்தது. கருப்பு மான் வேட்டை வழக்கு, பல காதல் வதந்திகள் என பல்வேறு காரணங்களால் அவர் அடிக்கடி சர்ச்சைகளில் இடம் பிடித்து விடுகிறார். போன வருஷம் கூட அவருக்கு எதிராக சில மிரட்டல்கள் வந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டது.

Salman Khan Bollywood Salman Khan Health Instagram

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டபோது கூட பாதுகாப்புடன் தான் கலந்து கொண்டார். அதுவே பெரிதாக பேசப்பட்டது. 60 வயதை தாண்டினாலும் சல்மான்கான் இன்னும் பாலிவுட் பெரிய வசூல் நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கிறார். புதிய படங்கள், தயாரிப்பு வேலைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என்று பிசியாக இருக்கும் சல்மான் கானின் லேட்டஸ்ட் போட்டோவை பார்த்ததும் ரசிகர்கள் பதறி போயிருந்தாலும் இப்போது அவர் தன்னுடைய புது போட்டோவை போஸ்ட் போட்டு எனக்கு எதுவும் ஆகவில்லை நான் அப்படியே இருக்கிறேன் என்று பதில் கொடுத்து இருக்கிறார்.

நடிகர் கரிகாலனை நினைவிருக்கா? திருநெல்வேலி மண்ணின் மைந்தன்.. இப்போதும் எப்படி இருக்கிறார் பாருங்க!
எது எப்படி இருந்தாலும் ஒரு சாதாரண நிகழ்ச்சியில் எடுத்த போட்டோ கூட இந்தியா முழுவதும் பேசப்படும் அளவுக்கு சல்மான்கான் இன்னும் ரசிகர்களின் கவனத்தில் இருக்கிறார் என்பதையே இந்த சம்பவம் நிரூபித்து இரக்கிறது போல.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+