அஜித் ஸ்டைலில் விஜய்.. கோட் சூட் உடன் பதவியேற்கும் முதல் தமிழ்நாடு முதல்வர் விஜய்!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் நடிகர் விஜய், இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில் அவர் கோட் சூட் அணிந்து வரலாற்றுச் சிறப்புமிக்க முறையில் பதவியேற்க உள்ளார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு முதலமைச்சர் கோட் சூட் உடன் பதவியேற்கும் தருணம் இது. இந்த நிகழ்வு தமிழக மக்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக விஜய் கோட் சூட் அணிய மாட்டார், வெகு சில முறை மட்டுமே அணிந்துள்ளார். கோட் சூட் அணியும் போதெல்லாம் அஜித் பெயரையும், அஜித் ஸ்டைலில் வந்தாகவும் மறக்காமல் குறிப்பிடுவார் விஜய்.
தற்போது முதல்வராகும் போதும் அஜித் ஸ்டைலில் விஜய் வந்தது குறிப்பிடத்தக்கது. அஜித் வாக்குபதிவு செய்ய வந்த போதும் வெள்ளி கோட் சூட்டில் வந்திருந்தார்.

நேரு உள்விளையாட்டு அரங்கம்
பதவியேற்பு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தொடங்கியுள்ளது. ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், லோக் பவனில் இருந்து புறப்பட்டு விழா அரங்கத்துக்கு வந்தார். அவர் விஜய்க்கு முதலமைச்சர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். இந்த விழாவில் விஜயுடன் சேர்த்து மொத்தம் 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர். இது தவெக அரசின் முதல் அமைச்சரவை அமைப்பாக அமையும்.
அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள்
பதவியேற்பு விழாவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வருகை தந்துள்ளனர். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விழாவில் பங்கேற்றார். லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விழா அரங்கத்துக்கு வந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பி. சண்முகம் ஆகியோரும் கலந்துகொண்டனர். காங்கிரஸ் கட்சியின் எம்.பி. விஜய் வசந்த் விழாவில் பங்கேற்றார். நடிகை திரிஷா விழா அரங்கத்தில் உற்சாகமாகப் பங்கேற்று போஸ் கொடுத்தார்.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு
தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற தவெக, பல கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைக்கும் நிலையில் விஜயின் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. இந்த நிகழ்வு தமிழ்நாட்டின் அரசியல் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த தருணம், புதிய அரசின் தொடக்கமாக அமையும். விழாவில் கலந்துகொள்ளும் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வருகை, அரசியல் ஒற்றுமையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
விஜய் தலைமையிலான புதிய அரசு எப்படிப்பட்ட கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் என்பதை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இன்றைய பதவியேற்பு விழா தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications
