முன்னாள் ராணுவ அதிகாரி வீட்டில் துணிகர கொள்ளை
சென்னை:
சென்னையில் முன்னாள் ராணுவ அதிகாரியின் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், அங்கிருந்து ரூ.1.5லட்சம் மதிப்புள்ள நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
சென்னை பெசன்ட் நகர் பகுதியில் அடுத்தடுத்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருவதால் மக்கள்பெரும் பீதியில்ஆழ்ந்துள்ளனர்.
பெசன்ட் நகர் பகுதியில் சில மாதங்களுக்கு முன் வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் அங்கிருந்தகாசாளரைக் கொன்று விட்டு பணத்தைக் கொள்ளையடித்து விட்டுத் தப்பினர். அதன் பிறகு பல முறைஅப்பகுதியில் உள்ள பல வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்டன.
இந்நிலையில் முன்னாள் ராணுவ அதிகாரி வீட்டில் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள நகைள் மற்றும்ரூ.1,500 பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பெசன்ட் நகரில் உள்ள பத்மநாபா நகர் பகுதியில் வசித்து வரும் பாலகோபால் என்ற அந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி, தன் மனைவியுடன் நேற்று மாலை பொருள்கள் வாங்குவதற்காககடைக்குப் போயிருந்தார்.
பின்னர் இரவு வீட்டுக்குத் திரும்பிய அவர், கதவு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சிஅடைந்தார். பதறியபடி அவர்கள் இருவரும் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.
அங்கு வீட்டுக்குள் இருந்த பொருட்கள் அனைத்தும் வாரியிறைத்துக் கிடந்தன. படுக்கறையில்உள்ள பீரோ உடைக்கப்பட்டு அங்கு வைத்திருந்த பாலகோபாலின் மனைவியுடைய ரூ.1.5 லட்சம்மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிய வந்தது. மேலும் ரூ.1,500 பணமும் திருடுபோயிருந்தது.
இதையடுத்து பாலகோபால் போலீசாருக்குத் தகவல் தரவே, அவர்கள் விரைந்து வந்து விசாரணைநடத்தினர். அவர்கள் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications