ராமநாதபுரத்தில் ரயிலை மறிக்க முயன்ற 700 மீனவர்கள் கைது
ராமநாதபுரம்:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை-ராமேஸ்வரம் ரயிலை மறிக்க முயன்ற 450பெண்கள் உள்பட சுமார் 700 மீனவர்கள் இன்று ராமநாதபுரத்தில் கைது செய்யப்பட்டனர்.
கடல் கொந்தளிப்பு, புயல், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களின் போது தங்களுக்குஅளிக்கப்படும் நிவாரணத் தொகையை தங்கள் குடும்பத்தினருக்கும் அளிக்க வேண்டும், கடலுக்குள்குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் விசைப் படகுகளை மீன் பிடிக்க அனுமதிக்கக் கூடாது ஆகியவைஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்றுபோராட்டம் நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்குச் செல்லும் ரயிலை ராமநாதபுரத்தில்மறித்து போராட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
அதற்காக மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட சுமார் 700 பேர் ராமநாதபுரம் ரயில்நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்புஏற்பட்டது. ரயில் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
ஆனாலும் மீனவர்கள் ரயில் நிலையத்திற்குச் செல்லும் முன்பாகவே போலீசார் அவர்களைத் தடுத்துநிறுத்தி கைது செய்து விட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 450 பேர் மீனவக் குடும்பத்தைச்சேர்ந்த பெண்கள் ஆவர்.
அப்போது மீனவர்கள் சங்கத்தின் தலைவர் பாலுச்சாமி நிருபர்களிடம் கூறுகையில்,
இயற்கைச் சீற்றங்களின்போது மீனவர்களின் குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்று கோரி சமீபத்தில் டெல்லியில் நாங்கள் போராட்டம் நடத்தினோம்.
பின்னர் இது தொடர்பாக பிரதமர் வாஜ்பாயிடம் நாங்கள் புகார் மனு கொடுத்தபோது, எங்களுடையஅனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார்.
ஆனால் தமிழக அரசு இது தொடர்பாக எங்களுடைய எந்தவொரு கோரிக்கையையும் பரிசீலிக்கவேஇல்லை.
மேலும் கடற்கரையிலிருந்து மூன்று நாட்டிகல் மைல் தொலைவுக்கு மேல் வந்து மீன் பிடிக்க விசைப்படகுகளுக்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடையைத் தொடர்ந்து உறுதியாகக்கடைப்பிடிக்க வேண்டும்.
எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக வருவாய்த் துறை அதிகாரியான சூரியமூர்த்தியுடன் நாங்கள்பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைத் தொடர்ந்தே ரயில்மறியல் போராட்டத்தை நடத்த முடிவு செய்தோம் என்றார் பாலுச்சாமி.
பின்னர் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களும் வேன்களில் அடைத்து கொண்டுசெல்லப்பட்டனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து ராமநாதபுரம் ரயில் நிலையத்தைச் சுற்றிலும் இன்றுபெரும் பதற்றம் ஏற்பட்டது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications