சிவானந்த குருகுல சிறுவர், சிறுமியர் டெல்லி பயணம்
சென்னை:
குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சந்தித்துப் பேசவும் ஜனாதிபதி மாளிகையை சுற்றிப் பார்க்கவும் சென்னைசிவானந்தா ஆதரவற்றோர் ஆசிரமத்தைச் சேர்ந்த 100 சிறுவர், சிறுமியர் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
இந்த குருகுலத்தின் ஆதரவற்ற குழந்தைள் கலாமைச் சந்திக்க விரும்பினர். இதையடுத்து சிவானந்தா குருகுலததைச்சேர்ந்த நிர்வாகிகள் ரயில்வே அமைச்சர் ஏ.கே. மூர்த்தியிடம் பேசினர். அவர் ஜனாதிபதியிடம் பேசினார்.
ஆதரவற்ற குழந்தைகளைப் பார்க்க ஆர்வத்துடன் இருப்பதாக மூர்த்தியிடம் கலாம் கூறினார்.
இதையடுத்து ஆசிரமத்தைச் சேர்ந்த100 சிறுவர், சிறுமியர்கள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமைச் சந்தித்துப்பேசத் தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து இவரகளை டெல்லி அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளை மூர்த்தியே செய்தார். டெல்லி ரயிலில்இவர்களுக்காக தனிப் பெட்டி ஒதுக்கவும் ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இக் குழந்தைகளுக்குஉரிய முறையில் உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரவும் ரயில்வே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து நேற்றிரவு இந்தக் குழந்தைகள் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் கூறுகையில்,அப்துல்கலாமைச் சந்திப்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதாகவும், அவரிடம் நிறைய கேள்விகள் கேட்கப்போவதாகவும் மகிழ்ச்சியுடன் தெவித்தனர்.
26ம் தேதி பிரதமர் வாஜ்பாயையும் இவர்கள் சந்திக்க மூர்த்தி ஏற்பாடு செய்துள்ளார்.
வல்லரசாக முடியும்..அப்துல்கலாம்
2020ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரின்ஒருங்கிணைந்த செயல்பாடு மிகவும் அவசியம் என்று குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூறியுள்ளார்.
கோவையில் இந்தியத் தொழிலகங்களின் சம்மேளனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது விவசாயம், கல்வி, சுகாதாரம், அடிப்படைக் கட்டமைப்பு, தொழில்நுட்பம் ஆகிய துறைகள் அனைத்தும்ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அப்போதுதான் இந்தியாவை 2020ம் ஆண்டுக்குள் வல்லரசாக்க முடியும்.
இந்தத் துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் இந்தியாவில் உள்ள ஏழை மக்களைஉயர்த்தவும் தனி நபர் வருமானத்தை இரட்டிப்பாக்கவும் முடியும் என்றார்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications