கல்லல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் தீவிரவாதி
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில் நடந்த இரட்டைக் கொலைகள் தொடர்பாக விசாரணை நடத்தி வரும்கல்லல் போலீசாரிடம் தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைவர் ராஜாராமன் ஒப்படைக்ரப்பட்டுள்ளார்.
சென்னையில் வைத்து சமீபத்தில் கைது செய்யப்பட்டவர் ராஜாராமன். தமிழ்நாடு விடுதலைப் படை என்றநக்சலைட் அமைப்பின் தலைவராவார். பல்வேறு கொலைகள், வங்கிக் கொள்ளைகள், வழிப்பறி, ஆள் கடத்தல்போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்.
சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரை க்யூ பிராஞ்ச் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துவிசாரித்து வருகின்றனர். இந் நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் நடந்த இரட்டை கொலையில் இவருக்குத்தொடர்பு இருப்பதாக அந்த வழக்கை விசாரித்து வரும் கல்லல் போலீசார் கருதுகின்றனர்.
இதையடுத்து அவரை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அனுமதி கோரி காரைக்குடி நீதிமன்றத்தில் கல்லல்போலீஸார் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைக்காக பலத்த பாதுகாப்புடன் ராஜாராமன் காரைக்குடிக்குக் கொண்டுவரப்பட்டார். நீதிபதி முன் ஆஜரான அவர், தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் இது தொடர்பாக மனிதஉரிமை ஆணையத்திடம் புகார் அளிக்க விரும்புவதாகவும் அதுகுறித்து நீதிபதி பரிந்துரை செய்ய வேண்டும்என்றும் கோரினார்.
அதுகுறித்து பரிசீலிப்பதாக தெவித்த நீதிபதி ராஜமாணிக்கம், விசாரணைக்காக ராஜாராமனை கல்லல்போலீஸாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிப்ரவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் ராஜாராமன்மீண்டும் ஆஜர்படுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications