பாதிரியார் மீது ஆசிரியை செக்ஸ் புகார்

Subscribe to Oneindia Tamil

சாத்தான்குளம்:

ஆசிரியையிடம் தவறாக நடந்து கொண்டதாக பாதிரியார் மீது புகார் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இவர் மீதுபோலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த பாதிரியார் அதிமுக சார்பில் சாத்தான்குளத்தில் போட்டியிட சீட்கேட்டு மனு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தாளாளராக இருப்பவர் முதன்மை குரு ஜோசப்லியோன் அடிகளார் (வயது 50).

இதே பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியையாக அன்பரசி என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் ஜோசப்லியோன் அவ்வப்போது சில்மிஷம் செய்து வந்தார். தகாத முறையிலும் நடந்து கொண்டார். இதையடுத்து இவர்மீது ஆசிரியை போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்துவிட்டனர்.

இதனால் வேறு வழியின்றி அந்த ஆசிரியை தொடர்ந்து பணியாற்றினார். ஆனால், அவர் சரியாகபணியாற்றவில்லை என்று கூறி அவரை ஜோசப் லியோன் பணி நீக்கம் செய்தார்.

இந்தப் பணி நீக்கத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அதற்கு இடைக் காலத்தடையும் வாங்கி மீண்டும் பணியில் சேர்ந்தார் அன்பரசி.

ஆனால், மீண்டும் ஜோசப் லியோனின் சீண்டல்களும் மிரட்டல்களும் தொடர்ந்ததால் மீண்டும் போலீசில் புகார்கொடுக்கச் சென்றார் அன்பரசி. அப்போதும் வழக்குப் பதிவு செய்ய காக்கிச் சட்டைகள் மறுத்தன. இதையடுத்துநேரடியாக அப் பகுதியின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அனுகினார். தன்னிடம் பாதிரியார் தவறாக நடந்துகொள்ள முயல்வதையும், போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பதையும் புகாராக மாஜிஸ்திரேட்டிடம்கொடுத்தார்.

இதையடுத்து ஜோசப் லியோன் மீது உடனே வழக்குத் தொடருமாறு மாஜிஸ்திரட்ே நாராயணன் போலீசாருக்குஉத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஜோசப் லியோன் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

இவர் சாத்தான்குளத்தில் அதிமுக சார்பில் போட்டியிட சீட் கேட்டு பணமும் கட்டியிருந்தார். ஆனால், இவருக்கு சீட்தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+