சாத்தான்குளம் தொகுதியை "சீல்" வைக்க தேர்தல் கமிஷன் ஆணை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சாத்தான்குளம் தொகுதியில் வந்து குவிந்துள்ள வெளியூர் நபர்களை உடனே வெளியேற்றிஅத்தொகுதி முழுவதையும் சீல் வைக்க தலைமைத் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் கடந்த ஒரு மாதமாகவே வெளியூரிலிருந்து ஏராளமான வெளியூர் நபர்களும்,ரெளடிகளும் வந்து குவிந்துள்ளனர் என்றும், அதிமுகவினர்தான் இவர்களை அழைத்து வந்துள்ளனர்என்றும் தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கட்சி பலமுறை புகார் கொடுத்தது.

மேலும் தங்கள் பகுதிகளில் நூற்றுக்கணக்கான புதிய புதிய ஆட்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகஉள்ளூர் மக்களும் கூறி வருகின்றனர்.

நாளை சாத்தான்குளத்தில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அத்தொகுதி முழுவதையும் சீலிடவேண்டும் என்று தமிழக தேர்தல் கமிஷனுக்கு நேற்று தலைமைத் தேர்தல் கமிஷன்உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவில்,

சாத்தான்குளம் தொகுதியில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்துவதை உறுதி செய்யஅத்தொகுதி முழுவதும் "சீல்" வைக்க வேண்டும். வெளியூர் நபர்கள் யாரும் தொகுதிக்குள் நுழைந்துஅசம்பாவிதங்களில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும்.

இந்தத் தொகுதியில் ஓட்டளிக்கும் உரிமை இல்லாத வெளி நபர்கள், குறிப்பாக அரசியல்வாதிகள்மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்கள் அனைவரையும் உடனடியாக தொகுதியை விட்டுவெளியேற்ற வேண்டும்.

பிப்ரவரி 25ம் தேதி (இன்று) மதியத்துக்குள் இந்தப் பணியை முடிக்க வேண்டும். இந்த உத்தரவைசம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகள் அனைவருக்கும் உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும்.

குறிப்பாக சாத்தான்குளத் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஐந்து மத்தியப் பார்வையாளர்களுக்கும்இந்த உத்தரவை தெரியப்படுத்தி, இது தொடர்பான பணிகள் சரியான முறையில் நடைபெறுகிறதாஎன்பதைக் கண்காணிக்க உத்தரவிட வேண்டும்.

மேலும் இத்தொகுதியில் உள்ள 173 வாக்குச் சாவடிகளை ஐந்து பார்வையாளர்களும் தங்களுக்குள்பிரித்துக் கொண்டு, தேர்தலின்போது அனைத்து சாவடிகளுக்கும் சென்று நிலைமையைக்கண்காணிக்க வேண்டும். குறிப்பாக, வாக்காளர்களை ஓட்டுப் போட விடாமல் போலீசார்விரட்டுகிறார்களா என்பதைக் கண்டறிய வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வெளியூர் நபர்களை அகற்றி, சாத்தான்குளம் தொகுதியை "சீல்" வைக்கும்பணியைத் தொடங்கி விட்டதாக நேற்று மாலை தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு தமிழக தேர்தல்கமிஷன் அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அரசு அதிகாரிகளும், போலீசாரும், அமைச்சர்களும், சமூக விரோதிகளும் அதிமுகதொண்டர்களுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவுக்கு ஆதரவாக பல சட்ட விரோத, விதிமீறல்களில்ஈடுபட்டதை தேர்தல் கமிஷன் உணர்ந்துவிட்டது. இதையடுத்துத் தான் இந்த அதிரடியான உத்தரவுவந்துள்ளது.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+