மேலும் 42 தமிழக மீனவர்கள் கடத்தல்: ராமேஸ்வரத்தில் பதற்றம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

ஏற்கனவே 75 தமிழக மீனவர்களை இலங்கை மீனவர்கள் தாக்கி கடத்திச் சென்றுள்ள நிலையில் அவர்கள் மீண்டும்42 ராமேஸ்வரம் மீனவர்களைப் பிடித்துக் கொண்டு போய் விட்டனர்.

நேற்று முன்தினம் கச்சத் தீவு அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான ராமேஸ்வரம்மீனவர்களை இலங்கை மீனவர்கள் திடீரெனத் தாக்கினர்.

பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதால் பல தமிழக மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.அவர்களுடைய பல படகுகளும் பெட்ரோல் குண்டு வீச்சினால் எரிக்கப்பட்டன. மேலும் சுமார் 75 மீனவர்களைஇலங்கை மீனவர்கள் கடத்திச் சென்று அவர்களை இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்து விட்டனர்.

இலங்கை-தலைமன்னாரில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களில் பெரும்பாலானவர்கள்படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்குள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்றும் இலங்கை மீனவர்கள் தங்கள் அட்டூழியத்தைத் தொடர்ந்துள்ளனர். பாம்பன், தங்கச்சிமடம்போன்ற பகுதிகளிலிருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை அவர்கள் மோசமாகத்தாக்கியுள்ளனர்.

பின்னர் 42 தமிழக மீனவர்களையும், 9 படகுகளையும் இலங்கை மீனவர்கள் கடத்திக் கொண்டு போய்விட்டனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக இலங்கை மீனவர்கள் செய்த அட்டகாசத்தால் தமிழக மீனவர்கள் அதிர்ச்சியும்வேதனையும் அடைந்துள்ளனர். இதனால் இன்று முழுவதும் அவர்கள் மீன் பிடிப்பதற்காகக் கடலுக்குள்செல்லவில்லை.

ராமேஸ்வரத்தின் பல்வேறு இடங்களிலும் அவர்கள் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர். தமிழக அரசும்,மத்திய அரசும் இவ்விஷயத்தில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள்கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கிழக்கு கடலோரக்காவல்படையின் கமோடாரான கமாண்டர் ஆர்.எஸ். வாசன் கூறியுள்ளார். ராமேஸ்வரம் கடல் பகுதிகளில்மீனவர்களுக்கான பாதுகாப்புகள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

54 மீனவர்கள் விடுதலை:

இதற்கிடையே நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட 75 மீனவர்களில் 54 பேர் வரும் வெள்ளிக்கிழமை விடுதலைசெய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

சென்னையில் இந்தத் தகவலைத் தெரிவித்த தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், இந்த 54மீனவர்களும் 15 படகுகளில் வரும் வெள்ளிக்கிழமை ராமேஸ்வரம் திரும்புவார்கள் என்று தெரிவித்தார்.

எஞ்சிய 21 மீனவர்களும் அதன் பின்னர் வேறொரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்றும் அவர் கூறினார்.மேலும் நேற்று மீண்டும் கடத்தப்பட்ட 42 மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் ராதாகிருஷ்ணன் கூறினார்.

-->

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+